This Article is From Jun 01, 2020

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்; பதுங்கு குழிக்கு அழைத்துச்செல்லப்பட்ட டிரம்ப்!!

வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென நடந்த இந்த போராட்டத்தை டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை என அமெரிக்க டெய்லி பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்; பதுங்கு குழிக்கு அழைத்துச்செல்லப்பட்ட டிரம்ப்!!

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்; பதுங்கு குழிக்கு அழைத்துச்செல்லப்பட்ட டிரம்ப்!!

ஹைலைட்ஸ்

  • Trump was there for less than an hour before being brought upstairs
  • His team was surprised by protests witnessed outside the White House
  • On Sunday, as many as 40 cities across US had imposed curfews
Washington:

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்த போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்புக்காக பதுங்கு குழிக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

வாஷிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கானோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்ற போதும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சிறிது நேரம் எடுத்துள்ளது. 

இதனிடையே, பாதுகாப்பு காரணமாக அதிபர் டிரம்ப் பதுங்கு குழிக்க அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அவர் அங்கு சுமார் ஒரு மணி நேரம் இருக்க வைக்கப்பட்டு, பின்னர் மேலே அழைத்து வரப்பட்டுள்ளார் என தெரிகிறது.

வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென நடந்த இந்த போராட்டத்தை டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை என அமெரிக்க டெய்லி பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சமயத்தில், மெலனியா டிரம்ப் மற்றும் பரோன் டிரம்ப் ஆகியோரும் அவருடன் அழைத்துச் செல்லப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் மே.25ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, தேசிய காவல்படையினர் 15 மாகாணங்களிலும், வாஷிங்டனிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் மேலும், 2,000 படையினரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயாராக வைக்கப்பட்டுள்ளனர். 

.