Read in English
This Article is From Dec 19, 2018

உலக பொருளாதார மாநாடு: அமெரிக்கா ஃப்ர்ஸ்ட் கொள்கையுடன் ட்ரம்ப்

ட்ரம்பின் மகளும், அமெரிக்க அதிபரின் ஆலோசகருமான இவான்கா ட்ரம்ப்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

Advertisement
உலகம்

சுவிஸ் ஸ்கி ரிசார்ட்டில் நடக்கும் கூட்டத்திலும் பங்கேற்கிறார் இவான்கா.

Washington:

"அடுத்த மாதம் தாவோஸில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்வார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சரா சாண்டர்ஸ் கூறுகையில் ''அதிபர் சென்ற வருடம் போன்றே இந்த வருடமும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வார்'' என்றார்.

மேலும், ட்ரம்பின் மகளும், அமெரிக்க அதிபரின் ஆலோசகருமான இவான்கா ட்ரம்ப்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். சுவிஸ் ஸ்கி ரிசார்ட்டில் நடக்கும் கூட்டத்திலும் பங்கேற்கிறார் இவான்கா.

இவர்கள் தவிர ட்ரம்பின் மருமகனும், அதிபர் ஆலோசகருமான‌ ஜெரார்டு குஷனர், வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ, வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் ஆகியோரும் உடன் செல்கின்றனர். 

Advertisement

தாவோஸில் ட்ரம்ப் உலக பொருளாதார கூட்டத்தில் பங்குபெறுவது இது இரண்டாவது முறை. அமெரிக்கா ஃபர்ஸ்ட் கொள்கை தான் சென்ற வருடத்தின் ட்ரம்பின் முக்கிய கருத்தாக இருந்தது. இந்த வருடமும் அது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப் அமெரிக்க உறவுகள் மற்றும் வர்த்தகம் குறித்து இந்தக் கூட்டத்தில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிற‌து. நிறுவனங்களுக்கான பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement