ட்விட்டரில், அதிபர் ட்ரம்ப் மற்றும் அதிபர் கென்னடி இருவரையும் ஒப்பிட்டு வருகிறார்கள்.
சான்டா க்ளாஸ் குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளித்துள்ள பதில் வைரலாகிவருகிறது. 7 வயது குழந்தை ஒன்று ட்ரம்பிடம் சான்டா க்ளாஸ் குறித்து அதிபர் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ட்ரம்ப் "இன்னும் சான்டா க்ளாஸையெல்லாம் நம்புகிறீர்கள்" என்று கேட்டார். இதனை 1961ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜான் கென்னடியின் பதிலோடு ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
சான்டா க்ளாஸ் எப்படி இருக்கிறார் என்ற கேள்விக்கு ட்ரம்ப் இப்போது புருவத்தை உயர்த்தி ''இன்னுமா சான்டா க்ளாஸையெல்லாம் நம்புகிறீர்கள்'' என்றார். இதே கேள்வியை ஜான் கென்னடியிடம் அப்போது ஒரு குழந்தை கேள்வி கேட்டபோது ''சான்டா க்ளாஸ் உயிரோடு தான் இருக்கிறார். நான் அவரிடம் பேசினேன் அவர் நன்றாக உள்ளார்" என்று கூறியிருக்கிறார் கென்னடி.
இதனை வரலாற்று ஆய்வாளரான பெஸ்சோலஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வட பகுதியில் குண்டு வீசுவதை ரஷ்யர்கள் நிறுத்தியுள்ளனர். அதனால் சான்டா க்ளாஸ் நன்றாக இருக்கிறார். உயிரோடு இருக்கிறார் என்றார் .
கென்னடியின் இந்தத் தகவல் பென்டகனில் உள்ள காப்பகத்திலிருந்து பெறப்பட்டது என்று கூறப்படுகிறது