This Article is From Feb 25, 2020

''ட்ரம்பின் வருகை இந்தியா - அமெரிக்கா உறவை வலுப்படுத்தும்'' - ராம் மாதவ்

கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஹவுதி மோடி நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் சாயலில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்தியாவில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

Advertisement
இந்தியா

டிரம்பின் வருகையின் போது இந்திய வர்த்தகம் புதிய உச்சத்தை தொடும் என்று ராம் மாதவ் கூறியுள்ளார்.

New Delhi:

அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகை இந்தியா - அமெரிக்கா உறவை வலுப்படுத்தும் என்று பாஜகவின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகை குறித்து ராம் மாதவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

டிரம்பின் இந்திய பயணத்தை முன்னிட்டு நமஸ்தே மோடி என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அமகதாபாத்தில் நடைபெறும் இந்த நிகர்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனர். அப்போது அமெரிக்க - இந்தியர்களிடையே நல்லுறவு ஏற்படும். 
டிரம்பின் வருகை இந்தியா - அமெரிக்கா உறவை வலுப்படுத்தும். மேலும் வர்த்தகமும் புதிய உச்சத்தை அடையும். 


இவ்வாறு ராம் மாதவ் கூறினார்.

Advertisement

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிப்ரவரி 24-ம்தேதி இந்தியாவுக்கு வருகிறார். அகமதாபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம்பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஹவுதி மோடி நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் சாயலில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்தியாவில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

Advertisement
Advertisement