This Article is From Feb 24, 2020

''டிரம்பின் இந்திய பயணத்தால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பலன் இல்லை'' - சிவசேனா விமர்சனம்!!

மத சுதந்திரம் தொடர்பாக மோடியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினைகள். இந்தியாவை ஆள்பவர்களை மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்துத் தேர்வு செய்துள்ளனர். அந்த தலைவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என வெளிநாட்டுத் தலைவர்கள் வழிகாட்ட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்று சிவசேனா விமர்சித்துள்ளது.

''டிரம்பின் இந்திய பயணத்தால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பலன் இல்லை'' - சிவசேனா விமர்சனம்!!

டிரம்பின் வருகையை விட குஜராத்தில் கட்டப்பட்ட சுவர்கள்தான் அதிகம் பேசப்பட்டதாக சிவசேனா கூறியுள்ளது.

Mumbai:

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியப் பயணத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பலன் இல்லையென்று சிவசேனா விமர்சித்துள்ளது. 

இந்தியாவுக்குப் புறப்படும்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியுடன் வர்த்தகம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். அவர் இந்த நோக்கத்திற்காக மட்டுமே வந்துள்ளார் என்பது தெளிவாகிறது எனச் சிவனோ கூறியுள்ளது. 

இதுதொடர்பாக கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது-

டிரம்பின் இந்தியப் பயணத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. அப்படியிருக்கையில், டிரம்பின் இந்தியப் பயணத்தைப் பலர் புகழ்கின்றனர். அது ஏன் என்று தெரியவில்லை. 

அகமதாபாத்துக்கு டிரம்ப் வருகிறார். ஆனால் அந்த செய்தியை விட அங்குக் குடிசைகளை மறைப்பதற்காகக் கட்டப்பட்ட சுவர்கள்தான் அதிகம் பேசப்பட்டன. 

மத சுதந்திரம் தொடர்பாக மோடியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினைகள். இந்தியாவை ஆள்பவர்களை மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்துத் தேர்வு செய்துள்ளனர். அந்த தலைவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என வெளிநாட்டுத் தலைவர்கள் வழிகாட்ட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. 

இப்படி இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்குப் பதிலாக டிரம்ப், அகமதாபாத், ஆக்ரா, டெல்லியில் அதிக இடங்களைப் பார்க்க வேண்டும். 

இவ்வாறு சிவசேனா பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

.