Read in English
This Article is From Jul 02, 2018

கொலம்பியா அழகி பட்டம் வென்ற கழுதை: வினோத திருவிழா

கொலம்பியா மொனிக்கிரா மாகணத்தை சேர்ந்த கிராம் மக்கள் நடத்திய 'கழுதை திருவிழா'வை காண ஊர் மக்கள் படையெடுத்து வந்துள்ளனர்

Advertisement
விசித்திரம்

இளஞ்சிவப்பு புருவத்தை தூக்கி பார்வையிடும் அழகு, பொன்னிற தலைமுடியின் ஓரத்தில் ஆடும் பூவளையம், ஜொலிக்கும் நெக்லஸ், பளிச்சிடும் அழகான ஆடையை உடுத்தி ஒய்யார நடைப்போட்டு வந்த அழகியே..!

இது, பெண் அழகி குறித்த அறிமுகம் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். அதுதான் இல்லை!

கொலம்பியாவில் நடைப்பெற்ற 'கழுதை திருவிழா'வில் கலந்து கொண்டு சிறந்த ஆடை அலங்கார பரிசை தட்டிச் சென்ற கழுதை பற்றிய வர்ணனை இது.

59 போட்டியாளர்களை தோற்கடித்து, முதல் பரிசு பெற்றுள்ள ஆல்வரோ லோபஸ் என்றவரின் கழுதை, பார்வையாளர்களின் கைத்தட்டல்களை அள்ளிச்சென்றது.

அதுமட்டுமின்றி, வரும் செவ்வாய் கிழமை நடக்க இருக்கும் கால்பந்து உலக கோப்பை நாக்-அவுட் போட்டியில், இங்கிலாந்து - கொலம்பியா அணிகள் மோத உள்ளன. வெற்றி பெற்ற லோபஸின் கழுதை, கொலம்பியா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அணி கொடியை போத்தியபடி நடைப்போட்டு வந்தது.

கொலம்பியா மொனிக்கிரா மாகணத்தை சேர்ந்த கிராம் மக்கள் நடத்திய 'கழுதை திருவிழா'வை காண ஊர் மக்கள் படையெடுத்து வந்துள்ளனர்.

மலை பகுதிகளில் சுமை தூக்கும் பணிகளுக்கு, பெரும்பாலும் ட்ரக் உபயோகிப்பதால், கிராம மக்களுக்கும் கழுதைகளுக்கும் இருந்த உ,றவு குறைந்து வருகிறது. எனினும், கழுதைகளின் மேல் உள்ள அன்பால், இந்த ஊர் மக்கள், கடந்த 14 ஆண்டுகளாக 'கழுதை திருவிழா' நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement