Read in English
This Article is From Dec 06, 2018

"சிறிசேனா ஹிட்லர் போல் செயல்படுகிறார்" - ரணில் விக்ரமசிங்கே

அதிபர் சிறிசேனா மீது அவர் ஹிட்லர் போன்றவர் என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது

Advertisement
உலகம்
Colombo:

இலங்கையில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் ஆறு வாரங்களாக தொடர்கிறது. இந்நிலையில் அதிபர் சிறிசேனா மீது அவர் ஹிட்லர் போன்றவர் என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரதமராக நடந்த வாக்கெடுப்பில் தன்னை நிரூபித்துள்ள ரணில் விக்ரமசிங்கே தனது கருத்தை அழுத்தமாக இந்த விஷயத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபரில் தன்னை பதவியிலிருந்து நீக்கியது முதல் பிரதமருக்கான மாளிகையிலிருந்து வெளியேற மறுத்தார்.

அதிபர் அதிக பெரும்பான்மையுள்ள தன்னை தான் பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும், அதிபராக இருக்கும் நீங்கள் அரசியலமைப்பை மீறி ஹிட்லரை போல செயல்படாதீர்கள். அதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார் ரணில்.

2009ம் ஆண்டு தமிழீழ மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமராக்கியது இலங்கை அரசியல் சூழலை குழப்பத்தில் வைத்திருந்தது.

Advertisement

எப்படியிருந்தாலும் மீண்டும் ரணில் வாக்கெடுப்பில் வென்றார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் 2 ஓட்டுகளில் ராஜபக்சே தோற்றார்.

திங்களன்று நீதிமன்றம் ராஜபக்சேயின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. அவர் பிரதமாரக செயல்பட முடியாது என்று அறிவித்தது. 225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்பதை ஏற்க முடியாது என்று அதிபர் தெரிவித்துள்ளார்.

Advertisement

செவ்வாயன்று ராஜபக்சேயின் வழக்கறிஞர்கள் மீண்டும் மேல் முறையீடு செய்தாலும். இப்போதைக்கு அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.

ராஜபக்சே தனது ஆதரவளர்களிடம் அமைதிகாக்கும்படியும், இரண்டு வருடங்களுக்கு முன்பே பொதுத்தேர்தலை கொண்டு வர போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement