This Article is From Jun 01, 2019

“மத்திய அரசின் திட்டங்களுக்கு முடக்குபோடாதீர்கள்… மீறினால்”- மம்தாவுக்கு எச்சரிக்கை!

வரலாற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாஜக, “மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சி 2021 ஆம் ஆண்டு வரை தொடராது” என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

“மத்திய அரசின் திட்டங்களுக்கு முடக்குபோடாதீர்கள்… மீறினால்”- மம்தாவுக்கு எச்சரிக்கை!

மேற்கு வங்கத்தில் இருந்து தேபஸ்ரீ சவுத்ரியைத் தவிர பாபுல் சுப்ரியோவும் இந்த முறை மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • அமைச்சர் தேபஸ்ரீ சவுத்ரி இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்
  • மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் சவுத்ரி
  • மேற்கு வங்கத்தில் பாஜக, 18 இடங்களில் வெற்றி பெற்றது
New Delhi:

மத்திய அமைச்சர் தேபாஸ்ரீ சவுத்ரி, “மேற்கு வங்க அரசு, மத்திய அரசின் திட்டங்களை தடுக்கும் நோக்கில் செயல்பட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை எச்சரிக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

சவுத்ரி மேலும், “நான் மேற்கு வங்க அரசுடன் இணைந்து பணி செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். எனவே மத்திய அரசின் திட்டங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடக் கூடாது. எங்கள் பணிக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று கூறியுள்ளார். மேற்கு வங்க ராய்கஞ்ச் தொகுதியில் இருந்து எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சவுத்ரி. 

பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள இரண்டாவது அரசின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக (Union Minister of State) நியமிக்கப்பட்டுள்ளார் சவுத்ரி.

lt2m26r8

மேற்கு வங்கத்தில் இருந்து தேபஸ்ரீ சவுத்ரியைத் தவிர பாபுல் சுப்ரியோவும் இந்த முறை மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். பாடகராக இருந்து அரசியல் அவதாரம் எடுத்துள்ள சுப்ரியோவுக்கு கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் நடந்து முடிந்த மேற்குவங்க தேர்தலில் மொத்தம் இருக்கும் 42 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றிபெற்றன. 

வரலாற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாஜக, “மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சி 2021 ஆம் ஆண்டு வரை தொடராது” என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 
 

(IANS தகவல்களுடன் எழுதப்பட்டது)

.