பாகிஸ்தான் பெண்ணின் மீது காதல் வயபட்டு பாகிஸ்தான் சென்ற ஹமிது நிஹல் அன்சாரியை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.
Mumbai: ஹமிது நிஹல் அன்சாரி, எனும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆறு வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். நாடு திரும்பிய அன்சாரி இந்திய இளைஞர்களுக்கு ஒரு அறிவுரை வழங்கியுள்ளார். அதில் "ஃபேஸ்புக்கின் மீது அதீத காதல் கொள்ளாதீர்கள்" என்று கூறியுள்ளார். அதன் மூலம் தான் பாகிஸ்தான் பெண்ணின் மீது காதல் வயபட்டதாகவும், அப்போது தான் அந்த பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க நினைத்த அவரது பெற்றோரிடமிருந்து பாதுகாக்க அனுமதியின்றி பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆறு வருடங்களுக்கு முன் தான் தவறு இழைத்துவிட்டதாக கூறியுள்ள அன்சாரி, தற்போது மும்பையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். ''பெற்றோரிடமிருந்து எதையும் மறைக்க வேண்டாம் . அவர்கள் தான் சிறப்பான பாதையை காட்டுவார்கள். அது சட்டத்தை மீறாமல் நம்மை பாதுகாக்கும்'' என்று கூறியுள்ளார்.
மேலும் "ஃபேஸ்புக்கில் பழகுவதை வைத்து யார் மீதும் காதல் கொள்ளாதீர்கள். அது ஆபத்தானது" என்று கூறியுள்ளார் அன்சாரி.
விடுவிக்கப்படும் நாள் வந்ததும் மிகவும் ஆர்வமாக எனது உடைகளை உடுத்தி தயாரானதாகவும், ஒரு நிமிடத்தைக்கூட நான் வீணடிக்கக்கூடாது என்று நினைத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
33 வயதான ஹமிது நெஹால் அன்சாரி தனக்கு ஆன்லைனில் பழக்கமான பெண் தோழியை கட்டாய திருமணத்திலிருந்து பாதுகாக்க ஆப்கானிலிருந்து அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்தார். அதனால் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.