This Article is From Sep 13, 2018

“ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யாதீர்கள்“ - பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தல்

ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது அவருடன் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினர் குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என்கின்றனர்

“ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யாதீர்கள்“ - பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தல்

ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக ஸ்ரீபெரும்புதூரில் எழுப்பப்பட்ட நினைவிடம்

Chennai:

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அவர்களை விடுவிக்க கூடாது என்று, குண்டுவெடிப்பில் பலியான 14 பேரின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

விடுதலை புலிகள் அமைப்பினரால் ராஜீவ் காந்தி கடந்த 1991-ல் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போது, அவருடன் 14 பேர் உயிரிழந்தனர். அவர்களில் சென்னை பாடியை சேர்ந்த அப்பாஸ் என்பவரின் தாயாரும் ஒருவர்.

தாயார் உயிரிழந்தபோது 8 வயது சிறுவனாக அப்பாஸ் இருந்தார். ஏற்கனவே அவர் தந்தை உயிரிழந்ததால், ராஜிவ் கொலை சம்பவத்திற்கு பின்னர் அப்பாஸ் அனாதையானார். வாட்ச் கடை நடத்தி வரும் அவர்

என்.டி.டி.வி.க்கு அவர் அளித்த பேட்டியில், உடல் பல பாகங்களாக சிதறிய நிலையில் என் அம்மாவின் சடலத்தை என்னிடம் அளித்தார்கள். சற்று கற்பனை செய்து பாருங்கள்; அப்போது நான் எவ்வளவு துயரப்பட்டிருப்பேன். என் தாயார் கொல்லப்பட்டதில் இருந்து நீண்ட நாட்களாக அழுது கொண்டே இருந்தேன். மக்களின் உணர்வுகளுக்காக குற்றவாளிகளை விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் எங்கள் வாழ்க்கையே பாழாகிவிட்டது. அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள்; அதன்பின்னர் குற்றவாளிகளை விடுவிக்கவா வேண்டாமா என்று முடிவு எடுங்கள்“ என்றார்.

htd07ico

ராஜிவ் காந்தியுடன் கொல்லப்பட்ட பெண் ஒருவரின் மகன் அப்பாஸ். ஏற்கனவே தந்தையை இழந்ததால் 1991 குண்டுவெடிப்புக்கு பின்னர் அனாதையானார் அப்பாஸ்

சென்னையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் வைத்துதான் ராஜீவ் படுகொலை நடந்தது. அங்கு வசிக்கும் சாந்தகுமாரி என்பவர் தனது சகோதரி சரோஜா தேவி கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்தார். குண்டுவெடிப்பின்போது, சாந்தகுமாரி படுகாயம் அடைந்திருக்கிறார். காயங்கள் குணமாக 10 ஆண்டுகள் ஆனதாக அவர் தெரிவிக்கிறார்.

ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமலிங்க ஜோதி கூறுகையில், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோடு சில ஆண்டுகள் வசித்தோம். குற்றவாளிகளின் கருத்துக்கு மதிப்பளித்து அவர்களை விடுவிக்க முயற்சிப்பது மிகப்பெரும் அநீதி” என்று அவர் கூறினார்.

eeff0gbg

27 ஆண்டுகளாக குற்றவாளிகள் தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

குற்றவாளிகளில் ஒருவரான நளினி முதுநிலைப் பட்டத்தை சிறையில் முடித்துள்ளார். எழுத்தாளராக பேரறிவாளனும், கோயில் அர்ச்சகர்களாக சாந்தனும், முருகனும் மாறியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பீப்பிள் வாட்ச் மனித உரிமை அமைப்பின் இயக்குனர் ஹென்றி டிஃபேன் கூறுகையில், சிறைச்சாலை என்பது தண்டனை அனுபவிக்கும் இடம் மட்டுல்ல; அது குற்றவாளிகள் தங்களை முழுவதும் மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்கும் இடமாகும். ராஜீவ் கொலை குற்றவாளிகள் தங்கள் வாழ்நாளில் பாதியை சிறையில் கழித்து விட்டனர். அவர்கள் தங்களை முற்றிலும் மாற்றிக் கொண்டனர். நம்முடைய அரசியல் அவர்களது வாழ்க்கையை மேலும் பாழாக்கி விடக்கூடாது என்றார்.

ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கக் கோரும் தீர்மானத்தில் முடிவு எடுக்க கவர்னருக்கு கால அவகாசம் தேவைப்படும் என்று தெரிகிறது. ஆனால், தீர்மானத்தை அவர் ஏற்றுக் கொள்வார் என்பதால் 7 பேரின் விடுதலை பிரகாசமாகியுள்ளது.

.