Read in English
This Article is From Aug 21, 2018

உச்ச நீதிமன்றம் எல்லை மீறுகிறது - கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு

பாராளுமன்ற நிலைக்குழு இந்த மசோதாவை விவாதித்து, ஏற்க மறுத்துவிட்டதாக வேணுகோபால் பதிலளித்தார்

Advertisement
இந்தியா
New Delhi:

குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்த வழக்கு விசாரணையில், உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை அளிக்கும் வகையில் சென்றது. குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தல் சின்னம் அளிக்க மறுக்கும் உரிமையை தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் வழங்கலாமா என்ற கேள்விக்கு “அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அதிகாரம். நீதிமன்றம் அதில் தலையிடக் கூடாது” என்று மத்திய அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் “இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இல்லை” என்று மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார். “அரசியல்மைப்புச் சட்டம் அனுமதிக்காத இடத்துக்குள் நுழைய உச்ச நீதிமன்றம் முயற்சிக்கிறது” என்று அவர் கூறினார்.

குற்றப் பின்னணி கொண்டவர்களை தடை செய்து சட்டம் கொண்டு வந்தால், பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் நிலை உருவாகும் என்றும் வேணுகோபால் எச்சரித்தார்.

Advertisement

இந்த மனுவை விசாரித்த நீதிமன்ற அமர்வில், நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் கருத்தும் மத்திய அரசின் கருத்தும் ஒன்றாக இருந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் ரோஹின்டன் நாரிமனும் மத்திய அரசு வாதத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். “பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்காத வரையில், குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு சின்னத்தை வழங்க தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியும். நாங்கள் பாராளுமன்ற எல்லைக்குள் நுழையவில்லை” என்றார் நீதிபதி நாரிமன்.’

ஆனால், பாராளுமன்ற நிலைக்குழு இந்த மசோதாவை விவாதித்து, ஏற்க மறுத்துவிட்டதாக வேணுகோபால் பதிலளித்தார். இந்த வழக்கு ஆகஸ்ட் 28-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Advertisement
Advertisement