Read in English
This Article is From Jun 14, 2018

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை: இவர்தான் குற்றவாளியா!?

கெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது

Advertisement
Karnataka

சமூக வலைகதங்களில் பரவி வரும் சர்ச்சைக்குரிய புகைப்படம்

Highlights

  • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டார்
  • பெங்களூருவில் இருக்கும் தன் வீட்டிற்கு முன்னாலேயே கௌரி கொல்லப்பட்டார்
  • அடிப்படைவாத குழுக்குள் இந்த கொலை செய்திருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது
Bengaluru:

கெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், அதில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரின் வீட்டுக்கு முன்னேலேயே சில நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்தக் கொலையை சில அடிப்படைவாதக் குழுக்குள் செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீ ராம் சேனா என்ற சர்ச்சைக்குரிய அமைப்பை நடத்தி வரும் பிரமோத் மாலிக், கௌரி லங்கேஷ் கொலையில் சம்பந்தப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் நபருடன் புகைப்படம் எடுத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் அந்தப் புகைப்படத்தில் பிரமோத் மாலிக்குடன் இருக்கும் நபரின் பெயர் பரசுராம் வாக்மாரே. இவர் தான் கௌரி லங்கேஷைக் கொன்றவர்பகளில் முக்கியமானவர் என்று குற்றம் சுமத்தப்படுகிறது. இந்நிலையில் பிஜப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சிந்தாங்கியில் பரசுராம் கடந்த திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த புகைப்படத்தைப் பற்றி பிரமோத் மாலிக்கிடம் கேட்டபோது, 'பரசுராம் வாக்மாரே யார் என்பது எனக்குத் தெரியாது. என்னுடன் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் புகைப்படங்கள், செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் எல்லோரையும் எனக்குத் தெரியும் என்று சொல்வதற்கில்லை' என்று பதிலளித்துள்ளார்.

இது ஒரு புறமிருக்க, கௌரி லங்கேஷ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நவீன் குமாரின் வாக்குமூலத்தில், 'பிரமோத் மாலிக்தான் நான் வாழும் மதூர் பகுதியில் இந்து தர்ம கொள்கையை வளர்த்தெடுக்கச் சொன்னார்' என்று கூறியுள்ளார். மதூர் பகுதியில் ஸ்ரீ ராம் சேனா அமைப்பின் கிளையை நவீன் குமார் ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன் குமாரைப் பற்றி பிரமோத் மாலிக், 'நவீன் குமாரை எனக்குத் தெரியும். ஆனால், கௌரி லங்கேஷை கொலை செய்ய திட்டம் தீட்டியது பற்றி எனக்குத் தெரியாது' என்று பதில் கூறியுள்ளார்.

Advertisement