This Article is From May 29, 2019

“நாங்கள் எச்சரித்தோம் என்பதை மறவாதீர்கள்!”- அமெரிக்காவுக்கு செக்வைக்கும் சீனா

இந்த ‘நாங்கள் உங்களை எச்சரிக்கவில்லை’ என்கிற வார்த்தைப் பதம், சீனாவால் மிக நெருக்கடியான நேரத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

“நாங்கள் எச்சரித்தோம் என்பதை மறவாதீர்கள்!”- அமெரிக்காவுக்கு செக்வைக்கும் சீனா

முன்னதாக 2017 ஆம் ஆண்டு இந்தியாவுடன் நடந்த எல்லை பதற்றத்தின் போது, சீனா இதைப் போன்றே எச்சரிக்கை விடுத்தது.

BEIJING:

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து வரும் வர்தக்கப் போர் முற்றி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தாளான ‘பீப்பிள்ஸ் டெய்லி' (People's Daily), “வர்த்தகப் போரில் பதிலடி கொடுக்க நாங்கள் தயங்கமாட்டோம். நாங்கள் உங்களை எச்சரிக்கவில்லை என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்” என்று செக் வைத்துள்ளது. 

‘ரேர் எர்த்ஸ்' என்று சொல்லப்படும் பொருளை அமெரிக்காவுக்குக் கொடுக்காமல் இருந்து, வர்த்தகப் போரை தனக்கு சாதகமாக கொண்டு வர சீனா தயங்காது என்றும் அந்த செய்தித் தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரேர் எர்த்ஸ் என்பது 17 வேதியல் மூலப் பொருட்கள் கொண்ட ஒரு பொருள். அது, அதிநவீன மின்னணுப் பொருட்கள் முதல் ராணுவ ஆயுதங்கள் செய்வது வரை பயன்படுத்தப்படுகிறது. 

இதுவரை சீனா, இந்த ரேர் எர்த்ஸை அமெரிக்காவுக்கு கொடுக்க மாட்டோம் என்று சொல்லவில்லை என்றாலும், தற்போதைய கருத்து, அந்நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. 

சீன தரப்பு, நடந்து வரும் வர்த்தகப் போர் குறித்து, “அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருக்கும் நிறுவனக் கட்டமைப்பு என்பது மிகவும் அதிக சிக்கல்களைக் கொண்டது. இப்படிப்பட்ட ஓர் அமைப்பில் வர்த்தகப் போர் நடந்தால், யாராலும் ஜெயிக்க முடியாது. எனவே அமெரிக்க தரப்பு, சீனாவை குறைத்து மதிப்பிட வேண்டாம். நாங்கள் எச்சரிக்கைவில்லை என்று சொல்லக் கூடாது” என்று கறாராக கூறியுள்ளது. 

இந்த ‘நாங்கள் உங்களை எச்சரிக்கவில்லை' என்கிற வார்த்தைப் பதம், சீனாவால் மிக நெருக்கடியான நேரத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக 2017 ஆம் ஆண்டு இந்தியாவுடன் நடந்த எல்லை பதற்றத்தின் போது, சீனா இதைப் போன்றே எச்சரிக்கை விடுத்தது. 1978 ஆம் ஆண்டு வியட்நாம் போரின் போதும் சீனா இதைப் போன்று எச்சரிக்கை விடுத்தது. 

2014 முதல் 2017 வரை அமெரிக்கா இறக்குமதி செய்த ரேர் எர்த்ஸில் 80 சதவிகிதம் சீனாவில் இருந்து வந்தது. 
 

.