Read in English
This Article is From Dec 21, 2019

ஏர் இந்தியா நிறுவனம் ‘நகை’ போன்றது அதை விற்காதீர்கள் : தொழிற்சங்கங்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை

“நகை” என்று கருதப்பட்ட விமானத்தை விற்பனை செய்வது பொது மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் இந்திய நாட்டின் பெருமைக்கு இழுக்காக இருக்கும் என்று தொழிற்சங்ககள் கூறியுள்ளன.

Advertisement
இந்தியா Edited by

யுபிஏ -II. அரசு அனுமதித்த ரூ. 30,000 கோடி ஜாமீன் தொகுப்பில் ஏர் இந்தியா செயல்பட்டு வருகிறது.

New Delhi:

ஏர் இந்தியா நிறுவனத்தில் தொழிற்சங்கள் நிறுவனத்தை விற்கவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க வேண்டாம் என்றும் எல்&டி மற்றும் ஐ.டி.சி ஆகியவற்றின் அடிப்படையில்  போலவே ஏர் இந்தியாவை போர்டு நிர்வகிக்கும் நிறுவனமாக மாற்ற தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தன. 

“ஏர் இந்தியா மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு லாபம் குறித்து ரிபோர்ட் அளித்துள்ளது. வருடாந்திர செலவினம் ரூ. 4,000 கோடிக்கு மேல் இருப்பதால் மேலும் கடன் பெறுவது பெரிய சவாலாகும். கடன்களை பரிசீலித்து தொழிற்முறை மேலாண்மை செய்யலாம்” என்று கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. 

இந்தக் கடிதம் உள்துறை அமைச்சர் அமித் ஷா விமானப்போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர் பி.எஸ் கரோலா மற்றும் ஏர் இந்தியா சி.எம்.டி அஸ்வானி லோகானி ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

Advertisement

“நகை” என்று கருதப்பட்ட விமானத்தை விற்பனை செய்வது பொது மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் இந்திய நாட்டின் பெருமைக்கு இழுக்காக இருக்கும் என்று தொழிற்சங்ககள் கூறியுள்ளன. 

ஏர் இந்தியாவில் தனது 100 சதவீத பங்குகளை விற்க அரசாங்கம் முழுமுயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஏர் இந்தியா முதலீட்டுக்கான காலக்கெடுவாக 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிர்ணயித்துள்ளார்.

Advertisement

யுபிஏ -II. அரசு அனுமதித்த ரூ. 30,000 கோடி ஜாமீன் தொகுப்பில் ஏர் இந்தியா செயல்பட்டு வருகிறது. 

Advertisement