This Article is From Jun 20, 2018

அமெரிக்காவில் விசித்திர செடி: பட்டாள் பார்வை போகும்

செடி நஞ்சு தன்மை கொண்டதாகவும்,அதனை தொட்டால் எரிச்சல் மற்றும் பார்வை குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவில் விசித்திர செடி: பட்டாள் பார்வை போகும்
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள பெர்ரிவில் பகுதியில் ராபர்ட் எம்மா என்றவரின் தோட்டத்தில் வளரும் செடி முட்களுடனும், பெரிய இலைகளுடனும் இருந்தது. செடியை பார்த்த ராபர்ட், அதை தொட்டு பார்க்க பயப்பட்டார்.

விர்ஜீனியா டெக்கை சேர்ந்த விவசாய ஆய்வாளர் மார்க் சுட்பின் பெரிதாக வளர்ந்து நிற்கும் செடியை நேரில் சென்று பார்வையிட்டார். ராபர்ட் தோட்டத்தில் வளர்ந்து இருக்கும் செடி நஞ்சு தன்மை கொண்டதாகவும்,அதனை தொட்டால் எரிச்சல் மற்றும் பார்வை குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கவசங்களை அணிந்தபடி, மார்க் அந்த செடியின் சிறிய பகுதியை ஆய்விற்கு எடுத்து சென்றார்.

ராபர்ட் தோட்டத்தில் வளரும் இந்த செடி, ஒரு வகையான வீட் என்றும் நஞ்சு தன்மை கொண்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர், விர்ஜீனியா போக்குவரத்து கழக பணியாளர் ஒருவர் அலுவலக வெளி தோட்டத்தில் இது போன்ற செடிகளை கண்டுள்ளார். அமெரிக்க விவசாய துறை இது போன்ற செடிகளை கண்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கு வேண்டும் என எச்சரிகை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

“பொது மக்கள் இது போன்ற செடிகளை குறித்து அறிந்து கொள்ள அறிவுருத்தப்படுகிறது. வீட் என்று எண்ணி அதனை உபயோகப்படுத்தும் தவறுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது” என கென் ஸ்லாக், விர்ஜீனியா போக்குவரத்து கழக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
 
virginia hogweed wp

விர்ஜீனியாவில் உள்ள பெர்ரிவில் மற்றும் ப்ரெட்ரிக் பகுதிகளில் இந்த வகையான செடிகளை காண முடிகிறது. முன்னதொரு காலத்தில், அலங்கார செடியாகவும், எளிதில் வளர கூடிய தாவர வகையாகவும் இருப்பதால், இது போன்ற செடிகள் வளர்க்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த செடியின் தன்மையை குறுத்து அறியாமல், விவசாயிகள் மாடுகளின் தீவனமாக கொடுக்கின்றனர். எனவே விர்ஜீனியா விவசாயத் துறை இது குறித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஜோர்டன், விர்ஜீனியா டெக் மூலிகை பூங்காவின் பொறுப்பாளர் கூறினார்.

இந்த வகை வீட் செடிகள், தென்மேற்கு ஆசிய பகுதியில் தோன்றியதாகவும், பின்னர் அலங்கார பயன்பாட்டிற்காக அமெரிக்காவில் 1917 ஆம் ஆண்டு வளர்க்க தொடங்கினர் என தகவல்கள் கிடைத்தன.

ராட்சத வீட் செடி, 20000 விதைகளை கொடுக்க கூடியது. இதன் மூலம், ரிச்மண்டு, வாஷிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த செடி பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.

இந்த செடியை தொட்டால், தோல் பிரச்சனைகள், பார்வை குறைப்பாடு போன்ற உடல் சார்ந்த பிரச்சனைகள் வரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறியாமல் இந்த செடியை தொட நேர்ந்தால், கைகளை சோப் போட்டு நன்கு கழுவ வேண்டும் என அறிவுருத்தப்படுகிறது.



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.