This Article is From Mar 07, 2019

''காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளை புறக்கணியுங்கள்'' - அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம்

மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரசுடன் அக்கட்சி கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் முடிவு எடுத்திருக்கிறது ஆம் ஆத்மி.

''காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளை புறக்கணியுங்கள்'' - அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம்

டெல்லியில் மக்களவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

New Delhi:

காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளை புறக்கணியுங்கள் என்று டெல்லி மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார். 

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி வைக்கலாம் என பரவலாக பேசப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற கூட்டங்களில் ஆம் ஆத்மி தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில் கடந்த வாரம் டெல்லியி வேட்பாளர்களை ஆம் ஆத்மி அதிரடியாக அறிவித்தது. இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கவலை கொண்டதாக தெரியவில்லை. இதனால், டெல்லியில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுவது என்பது உறுதியாகி விட்டது. அக்கட்சிக்கு பஞ்சாபிலும் செல்வாக்கு உள்ளது. 

பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைக்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். 
டெல்லி பிரசாரக் கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது-

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு மட்டும் வாக்களியுங்கள். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை புறக்கணிப்பு செய்யுங்கள். கடந்த முறை நீங்கள் மோடிக்கு வாக்களித்தீர்கள். அதனால் உங்களுக்கு என்ன கிடைத்தது. 

இந்த முறை ராகுலுக்கோ அல்லது மோடிக்கோ வாக்களிக்காதீர்கள். ஆம் ஆத்மிக்கு மட்டுமே வாக்களியுங்கள். டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைத்து விட்டால் மக்கள் பேச்சைத்தான் போலீஸ் கேட்கும். 

டெல்லிக்கு மாநில  அந்தஸ்தை நிச்சயம் பெற்றுத் தருவோம். அதற்கு அடுத்த 10 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு உறுதி செய்யப்படும். 
இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார். 

.