தாய்லாந்துக்கு தேனிலவுக்கு வந்திருந்த அரைபி கைது செய்யப்பட்டார்.
BANGKOK: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பஹ்ரைன் கால்பந்து வீரர் ஹக்கிம் அல் அரைபியின் மனைவி தாய்லாந்து பிரதமரிடம் தனது கணவருக்கு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார். "அவரை அவருடைய சொந்த நாடான பஹ்ரைனுக்கு திரும்ப அனுப்ப வேண்டாம் அப்படி செய்தால் அவருக்கு அங்கு கொடிய சித்திரவதை தரப்படும். அவரை மரணத்தில் இருந்து காப்பாற்றுங்கள்" என்று தாய்லாந்து பிரதமர் ப்ரயுத் சன் ஒஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
"அவர் இடம் மாற்றப்படுவார் என்ற அறிவிப்பு வந்ததும் நான் பயந்துவிட்டேன்" என்று தனது கடிதத்தில் குறிபிட்டுள்ளார்.
அவரது வழக்கறிஞர் நட்தஸ்ரி பெர்க்மேன் பாதுகாப்பு காரணமாக அவருடைய மனைவியின் பெயரை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.
அரைபி, காவல் நிலையத்தை தாக்கியதால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பஹ்ரைன் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் அரைபியை சித்திரவதை செய்கின்றனர். காரணம் அவரது சகோதரர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதனை மனதில் வஞ்சம் கொண்டு சித்திரவதை செய்வதாக கூறப்படுகிறது.
அரைபியும், அவரது மனைவியும் தாய்லாந்துக்கு தேனிலவுக்கு வந்துள்ளனர். ஆனால், அங்கு அரைபி கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியாக்கியுள்ளது.
இங்கு சித்திரவதை கடுமையாக இருக்கும். அதனால் அவரை மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அரசு தரப்பில் இதற்கு பதில் ஏதுமில்லை.
இதற்காக சட்ட ரீதியாக வழக்கு தொடரப்போவதாக அரைபி தரப்பு கூறியுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)