This Article is From Feb 14, 2019

பாலிவுட்டின் மர்லின் மன்றோவுக்கு கூகுள் கவுரவம்

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையான மதுபாலாவை டூடுலாக வைத்துள்ளது கூகுள்

பாலிவுட்டின் மர்லின் மன்றோவுக்கு கூகுள் கவுரவம்

மதுபாலா தனது 9 வது வயதில் இந்தி திரையுலகிற்கு வந்தார்.

New Delhi:

பாலிவுட்டின் மர்லின் மன்றோ என்று அழைக்கப்படும் மதுபாலாவை கூகுள் கவுரவப்படுத்தியுள்ளது. 9 வயதில் இந்தி திரையுலகில் காலடி எடுத்து வைத்து மிகப்பெரும் நடிகையாக உருவெடுத்த மதுபாலாவுக்கு இன்று வயது 86. அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாகவும், அவரை மதிப்பளிக்கும் விதமாகவும் மதுபாலாவை டூடுலில் கூகுள் வைத்துள்ளது.

அழகு, ஆளுமை என பல திறமைகளால் ரசிர்களை மதுபாலா கவர்ந்திழுத்திருக்கிறார். மும்பையின் குடிசைப் பகுதியில் வளர்ந்த அவர், துணை நடிகையாகி பின்னர் முன்னணி நட்சத்திரமாக மாறினார்.

1947-ல் முதன் முறையாக தனது 14வது வயதில் நீல் கமல் படத்தில் ஹீரோயினாக நடித்தார். மதுபாலாவுக்கு 4 சகோதரிகள் இருந்தனர். குடும்பத்தில் அவர் ஒருவர் மட்டுமே சம்பாதிப்பவர் என்பதால் இரவு பகல் பாராமல் மதுபாலா உழைத்தார்.

பிரபல நடிகர் திலிப் குமார் மீது மதுபாலாவுக்கு காதல் ஏற்பட்டது ஆனால் அது நடிப்புத் தொழிலை பாதிக்கும் என்று கூறி மதுபாலாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். 70 படங்களை கடந்திருக்கும் மதுபாலா ஏகப்பட்ட விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

மதுபாலாவின் வாழ்க்கையை பெரும்பாலும் சோகம்தான் ஆக்கிமித்திருந்தன. நீண்டகாலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 1969 பிப்ரவரி 23-ம்தேதி காலமானார். சாலக் என்ற படத்தில் ராஜ்கபூர் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார் மதுபாலா. அத்துடன் அந்தப் படமும் கைவிடப்பட்டது.

.