This Article is From Mar 28, 2020

தூர்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் மற்றும் மகாபாரதம்

ராமானந்த் சாகர் இயக்கிய 'ராமாயணம்' மற்றும் பி.ஆர்.சோப்ரா இயக்கிய 'மகாபாரதம்' ஆகிய தொடர்களை இந்த 21 நாட்களில் ஒளிபரப்ப வேண்டுமென்று சமூக வலைத்தளத்தில் பலர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, பிரசர் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி சஷி சேகர் வேம்பதி "கோரிக்கைக்கான ஏற்பாடுகள் நடைப்பெற்றுகொண்டிருப்பதாக" கூறியிருந்தார்.

தூர்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் மற்றும் மகாபாரதம்

ராமாயண தொடரின் ஒரு பகுதி

New Delhi:

1980 களின் இறுதியிலும் 1990 காலகட்டங்களிலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தொடர் எதுவெனில் அது ராமாயணம் தொடராகத்தான் இருக்கும். கிட்டதட்ட நாடு முழுவதும் 82 சதவிகித மக்கள் இந்த தொடரினை கண்டு ரசித்தார்கள். 78 எபிசோடுகளைக் கொண்ட இந்த தொடரானது தற்போது, நாடு முழுவதும் அமலில் உள்ள 21 நாட்கள் முடக்க நடவடிக்கை  நேரத்தில் மறு ஒளிபரப்ப உள்ளதாக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

"மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, சனிக்கிழமை, மார்ச் 28-ம் தேதி முதல், டிடி நேஷனல் தொலைக்காட்சியில், ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்படும் என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். ஒரு பகுதி காலை 9 மணி முதல் 10 மணி வரையும், இன்னொரு பகுதி இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் ஒளிபரப்பாகும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ராமாயணத்தை டிடிநேஷ்னல் அலைவரிசையில் காலை 9 மணி மற்றும் இரவு 9 மணிக்குக் காணலாம் என்றும், மகாபாரதத்தினை டிடிபாரதி அலைவரிசையில் மத்தியம் 12 மணி மற்றும் இரவு 7 மணிக்குக் கண்டு ரசிக்கலாம் என்றும் ஜவடேகர் இன்று ட்விட் செய்திருந்தார்.

ராமானந்த் சாகர் இயக்கிய 'ராமாயணம்' மற்றும் பி.ஆர்.சோப்ரா இயக்கிய 'மகாபாரதம்' ஆகிய தொடர்களை இந்த 21 நாட்களில் ஒளிபரப்ப வேண்டுமென்று சமூக வலைத்தளத்தில் பலர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, பிரசர் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி சஷி சேகர் வேம்பதி "ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்றுகொண்டிருப்பதாக" கூறியிருந்தார்.

இந்து சமய கடவுளான ராமரின் வாழ்கையை அடிப்படையாகக் கொண்டு முதன் முதலில் 1987-ம் ஆண்டு ராமாயணம் துர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. இதில் ராமன் வேடத்தில் அருண் கோவில், சீதா வேடத்தில் தீபிகா சிக்காலியா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் ஹனுமனாக தாரா சிங், மந்தாராவாக லலிதா பவார், விந்திர அரோரா இந்திரஜித் வேடத்தில் நடித்திருந்தனர், அரவிந்த் திரிவேதி ராவணனாக நடித்திருந்தார். இதை சாகர் ஆர்ட்ஸ் திரைக்கு கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு மகாபாரதம் 1988-ல் ஒளிபரப்பப்பட்டது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் முழு முடக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த காவிய தொடரினை பார்க்குமாறு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெரும்பாலோனோர் கேட்டுக்கொண்டுள்ளனர். ஜவடேகரின் இந்த ஒளிபரப்பு அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நிலையில் மக்கள் பலர் 80 மற்றும் 90 களில் ஒளிபரப்பப்பட்ட பிற பிரபலமான நிகழ்ச்சிகளை மீண்டும் இயக்க பரிந்துரைத்துள்ளனர்.

(Inputs from PTI)
 

.