Read in English
This Article is From May 21, 2019

தூர்தர்ஷன் சேனலின் பழைய லோகோவுக்கு குட்-பை… புதிய டிசைன்ஸ பாருங்க!

புதிய லோகோவை அனுப்ப டிடி சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் சுமார் 10,000 என்ட்ரிகள் வந்தன

Advertisement
விசித்திரம் Edited by

தங்களது சேனலை நவீனமயமாக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை பிரசார் பாரதி முன்னெடுத்தது. 

தூர்தர்ஷன் சேனல், தனது பழைய பாரம்பரியமான லோகோவுக்கு குட்-பை சொல்ல உள்ளது. புதிய லோகோ டிசைன்ஸ் பற்றியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தூர்தர்ஷன் சேனலுக்கு புதிய லோகோவுக்காக சுமார் 10,000 வடிவமைப்புகள் பெறப்பட்டன. அதிலிருந்து 5-ஐ மட்டும் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது பிரசார் பாரதி அமைப்பு. கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜூலை முதல் ஆகஸ்ட் வரை இதற்கான போட்டி நடந்தது. தங்களது சேனலை நவீனமயமாக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை பிரசார் பாரதி முன்னெடுத்தது. 

இது குறித்து பிரசார் பாரதி அமைப்பின் சி.இ.ஓ, ஷாஷி ஷேகர், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டிடி இந்தியா லைவ் சேனலில் இந்த 5 லோகோக்களில் ஒன்று பயன்படுத்தப்பட உள்ளது' என்று பதிவிட்டுள்ளார். டிடி இந்தியா லைவ் என்பது, தூர்தர்ஷன் நடத்தும் பல சேனல்களில் ஒன்றாகும்.

2017 ஆம் ஆண்டு லோகோ மாற்றம் குறித்து தூர்தர்ஷன், “டிடி-யின் பழைய லோகோ பலருக்கு பிடிக்கும் என்றாலும், இந்தியாவின் இளைஞர்களுடன் தொடர்பு கொள்ளும் நோக்கில் சீக்கிரமே புதிய லோகோ பயன்படுத்தப்படும்” என்று கூறியது. 

புதிய லோகோவை அனுப்ப டிடி சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் சுமார் 10,000 என்ட்ரிகள் வந்தன. அதில் இருந்து 5 மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. இந்த 5 லோகோவையும் வடிவமைத்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் டிடி சார்பில் பரிசளிக்கப்பட உள்ளது. 

Advertisement


 

Advertisement
Advertisement