கடும் எதிர்ப்பை தொடர்ந்து, அப்பொருட்களை நீக்கிய அமேசான்
New York: சீக்கிய மதத்தினரின் நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் அமோசான் விற்பனை தளத்தில் பொருட்கள் விற்பனை செய்ததால் அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் கடும் எதிர்ப்பை காட்டினர்.
சீக்கியர்களின் புனித இடமாக கருதப்படும் அம்ரிஸ்டரில் உள்ள தங்க கோவிலின் படத்தை, அமேசான் நிறுவனம் வீடு வாயில் அருகே கால் துடைக்க போடப்படும் துடைபாண்களில் போட்டது. மேலும் தங்க கோவிலின் படங்கள் டாய்லெட் இருக்கை மூடிகளிளும் இருப்பதுபோல் படம் வெளியிட்டன.
இச்சம்பவத்தால் கோபமடைந்த சீக்கியர்கள் அதைத் தொடர்ந்து கருத்தை வெளியிட்டனர் ‘ அமேசானில் பல விற்பனையாளர்கள் இதுபோன்ற எங்களது மதத்தை அவமதிக்கும் வகையில் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
கழிப்பறை மற்றும் கால்துடைப்பு நாட்களில் தங்க கோவில் போன்ற புனிதமான தலங்களின் புகைப்படம் வெளியிடுவது எங்களது மதத்தை அவமதிக்கும் செயல். உடனடியாக இதுபோன்ற பொருட்களை அமேசான் ஆன்லைன் தளத்திலிருந்து நீக்கிவிட்டு, எதிர்காலத்தில் இது போன்ற பொருட்களை உற்பத்திக்கு செய்ய தடை செய்யவேண்டும்' என அமேசான் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஐ ஜெஃப் பீஸாஸ்க்கும் துணை தலைவர் டேவிட் ஜாபோல்ஸ்கைக்கும், கண்டனம் கடிதத்தை சீக்கியர்கள் கோலோந்தியன்ஸ்யின் தலைவர் சிம் சிங் எழுதியுள்ளார்.
மேலும் இது குறித்து விசாரணை குழு அமேசான் தளத்தில் நடத்திய சோதனையில் அப்பொருட்கள் நீக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.