This Article is From Apr 08, 2019

‘விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு, ராமர் கோயில்’- பாஜக அறிக்கையின் 10 முக்கிய புள்ளிகள்!

இந்தியாவின் 75 ஆண்டு கால சுதந்திரத்தைப் போற்றும் வகையில் 75 வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன: அருண் ஜெட்லி

‘விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு, ராமர் கோயில்’- பாஜக அறிக்கையின் 10 முக்கிய புள்ளிகள்!

சங்கல்ப் பத்ரா ஒரு நடைமுறைபடுத்தக் கூடிய வகையிலான ஆவணம். நாட்டின் மனசாட்சியை அது பிரதிபலிக்கிறது: அமைச்சர் ராஜ்நாத் சிங்

New Delhi:

லோக்சபா தேர்தல் ஆரம்பிக்க இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக, ‘சங்கல்ப் பத்ரா' என்ற தேர்தல் அறிக்கை வெளியிடட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா, மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக நிகழ்ச்சியின் போது பேசிய அமித்ஷா, ‘இந்தியா தற்போது உலகின் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு துறையிலும் சரியான விதத்தில் பங்காற்றியுள்ளார் பிரதமர் மோடி. கிராமப்புறங்களில் எல்.பி.ஜி இணைப்பு முதல் அனைவருக்கும் மருத்து காப்பீடுத் திட்டம் வரை நிறைய இருக்கிறது. இவை அனைத்தையும் செய்த பிரதமர் மோடி, எப்படி ஊழல் இல்லாத ஒரு ஆட்சியைக் கொடுப்பது என்பதையும் உலகிற்குக் காட்டியுள்ளார். பிரதமர் மோடி, தீவிரவாதத்தின் மையத்தைத் தாக்கியுள்ளார். அதன் மூலம் உலகிற்கு அவர் கறாரான ஒரு செய்தியையும் தெரிவித்துள்ளார்' என்று பேசினார். 

முக்கி 10 புள்ளிகள்:

1. இந்தியாவின் 75 ஆண்டு கால சுதந்திரத்தைப் போற்றும் வகையில் 75 வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன: அருண் ஜெட்லி

2. சங்கல்ப் பத்ரா ஒரு நடைமுறைபடுத்தக் கூடிய வகையிலான ஆவணம். நாட்டின் மனசாட்சியை அது பிரதிபலிக்கிறது: அமைச்சர் ராஜ்நாத் சிங்

3. இந்த அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்

4. நாட்டின் மக்கள் இந்த அரசு மூலம் பாதுகாப்பை உணர்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

5. மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள நாங்கள் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தினோம்: ராஜ்நாத் சிங்

6. 130 கோடி மக்களின் கனவுகளை நினைவாக்க எங்களின் சங்கல்ப் பத்ரா (தேர்தல் அறிக்கை) உதவும்: ராஜ்நாத் சிங்

7. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயில் கட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்போம்: ராஜ்நாத் சிங்

8. நமது ராணுவத்துக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்படும்: ராஜ்நாத் சிங்

9. வட கிழக்கு மாநிலங்களில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறுபவர்களை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்: ராஜ்நாத் சிங்

10. ‘பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை நாங்கள் அமல்படுத்தி, 60 வயதுக்கு மேல் இருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் கொடுப்பதை உறுதி செய்வோம்' - ராஜ்நாத் சிங்

.