Read in English বাংলায় পড়ুন
This Article is From Sep 14, 2018

சமையல் எரிவாயு குழாயில் அடுத்தடுத்து வெடிப்புகள்… பாஸ்டனில் பீதி!

Explosion in Boston: இந்த விபத்து நடப்பதற்கு முன்னர் தான், கொலம்பியா காஸ் நிறுவனம், பாஸ்டன் நகரின் பல இடங்களில் எரிவாயு குழாய் மாற்றப்படப் போவதாக தெரிவித்திருந்தது

Advertisement
உலகம்

Explosion in Boston: வடக்கு பாஸ்டனில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தகவல்

BOSTON :

அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் சமையல் எரிவாயு குழாயில் அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் நகரத்திலிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த குழாய் வெடிப்பால் 6 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் விபத்தால், பல வீடுகள் மற்றும் கட்டடங்கள் தீப்பிடித்து எறிந்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து, தீயணைப்பு வண்டிகள் வரவழைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போலீஸ், மக்களை வீடுகளிலிருந்து வெளியேறுமாறு தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்

Advertisement

பாஸ்டன் நகரத்தில் காவல் துறை தொடர்ந்து தெருக்களில் ரோந்துப் பணி மேற்கொண்டு, மக்களை வீடுகளிலிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்து வருகிறது.

மாசாஷுட்ஸின் கொலம்பியா காஸ் நிறுவனத்தின் முக்கிய குழாயில் ஏற்பட்ட அதிக அழுத்தமே, அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்படக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

விபத்து நடந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது

இந்த விபத்து நடப்பதற்கு முன்னர் தான், கொலம்பியா காஸ் நிறுவனம், பாஸ்டன் நகரின் பல இடங்களில் எரிவாயு குழாய் மாற்றப்படப் போவதாக தெரிவித்திருந்தது.

Advertisement

இது குறித்து கொலம்பியா காஸ் நிறுவனம், ‘இந்த விபத்து தொடர்பாக எங்கள் நிறுவனம் சார்பில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்று மட்டும் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக, அமெரிக்காவில் சமையல் எரிவாயு குழாய்களின் தரம் பற்றி பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பதிக்கப்பட்டுள்ள பல குழாய்கள் மிகவும் பழமையானது என்றும் அதனால், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

Advertisement

© Thomson Reuters 2018



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement