Read in English
This Article is From Nov 05, 2019

கலாம் விருதுக்கு தந்தை பெயர் மாற்றம்: எதிர்ப்பால் அறிவிப்பை திரும்ப பெற்ற ஜெகன் மோகன்!

’அப்துல் கலாம் பிரதீபா புரஸ்கார்’ பெயரில் வழங்கிவரப்பட்ட விருது இனி ’ஒய்.எஸ்.ஆர் வித்யா புரஸ்கார்’ என அழைக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்த நிலையில், அந்த அறிவிப்பை தற்போது திரும்ப பெற்றது.

Advertisement
Andhra Pradesh Edited by

அப்துல் கலாம் பெயரிலே விருதுகள் வழங்க வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி எச்சரித்துள்ளார்.

Amaravati:

ஆந்திராவில் மாணவர்களுக்கு வழங்கி வரப்பட்ட ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிரதீபா புரஸ்கார் என்ற விருதின் பெயரை அதிரடியாக மாற்றி ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு உத்தரவிட்டது.

இதற்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகள் வந்ததை தொடர்ந்து, அறிவிப்பு வெளியான ஒரே நாளில் மீண்டும் அதனை திரும்ப பெற்றது ஜெகன் மோகன் ரெட்டி அரசு.

முன்னதாக நேற்றைய தினம், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் மாணவர்களுக்கு வழங்கிவரப்பட்ட 'அப்துல் கலாம் பிரதீபா புரஸ்கார்' விருது இனி 'ஒய்.எஸ்.ஆர் வித்யா புரஸ்கார்' என அழைக்கப்படும் என்று ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டது. இந்த விருதானது, தேசியக் கல்வி நாளான நவம்பர் 11- ந் தேதி கல்வியில் சிறந்து விழங்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. 

ஒய்.எஸ்.ஆர் அல்லது ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி என்பவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஆவார். இரண்டு முறை முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, தென்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக திகழந்தவர் ஆவார். இவர் கடந்த 2009ம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். 

Advertisement

இந்நிலையில், அப்துல்கலாம் விருதுக்கு பெயர் மாற்றப்பட்டது தொடர்பாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், நாட்டிற்கு முன்னோடியாக விளங்கியவர் அப்துல் கலாம், அப்படிப்பட்டவரின் பெயரை மாற்றியது பெரும் அதிர்ச்சியை தருகிறது என்றும் இது வெட்கக்கேடான செயல் என்றும் சந்திரபாபு நாயுடு தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். 

மேலும், #YSRCPInsultsAbdulKalam என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியிருந்தார். 
 


கடந்த மே மாதம் ஆந்திர பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றார் ஜெகன் மோகன் ரெட்டி. 

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் விருதை மாணவர்களுக்கு வழங்க தொடங்கினார். 
 

Advertisement