This Article is From Jul 31, 2018

அப்போலோ மருத்துவர் பிரதாப் சி ரெட்டிக்கு "சிறந்த மனிதநேயர் விருது"

டில்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், சர்வதேச லயன்ஸ் க்ளப் பவுன்டேஷன் சார்பில் “சிறந்த மனிதநேயர் விருது” வழங்கப்பட்டது

அப்போலோ மருத்துவர் பிரதாப் சி ரெட்டிக்கு

டில்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், சர்வதேச லயன்ஸ் க்ளப் பவுன்டேஷன் சார்பில் “சிறந்த மனிதநேயர் விருது” வழங்கப்பட்டது.

இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, இந்த விருதினை அப்போலோ மருத்துவமனை தலைவர், மருத்துவர் பிரதாப் சி ரெட்டிக்கு வழங்கினார்.

சிறந்த மருத்துவ சுகாதர வசதிகள் இந்தியாவில் உள்ள பின் தங்கிய பொருளாதார மக்களுக்கும் கிடைக்கும் வகையில் பணியாற்றியதற்காக மருத்துவர் பிரதாப் சி ரெட்டிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. லயன்ஸ் க்ளப்பின் சிறந்த மனிதநேயருக்கான விருதை, இந்தியாவில் இருந்து பெறும் ஐந்தாவது நபர் என்ற பெருமையை மருத்துவர் பிரதாப் சி ரெட்டி பெற்றுள்ளார். குறிப்பாக, இந்த விருதை பெறும் இரண்டாவது இந்திய மருத்துவர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். மேலும், இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம் பூஷன், பத்ம விபூஷன் விருதுகளையும் மருத்துவர் பிரதாப் சி ரெட்டி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில், சர்வதேச லயன்ஸ் க்ளப் பவுண்டேஷன், அப்போலோ மருத்துவமனை குழு இணைந்து லயன்ஸ் அப்போலோ ஒருங்கினைத்த திட்டம் குறித்த அறிமுகம் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பத்தினருக்கு மருத்துவ உதவிகள் செய்து தரப்பட உள்ளது.

.