বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 03, 2020

கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்ட கார்: மீட்க முயற்சிக்கும் உரிமையாளர்! - வீடியோ!

வேகமாக அலை அடித்ததால், கார் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது. 

Advertisement
விசித்திரம் Edited by

கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்ட கார்: மீட்க முயற்சிக்கும் உரிமையாளர்! - வீடியோ!

கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்ட காரை அதன் உரிமையாளர் மீட்க முயற்சிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக டெய்லி மெயில் அளித்துள்ள தகவலில், இங்கிலாந்தின் கென்ட் நகரைச் சேர்ந்த லீ டால்பி எடுத்த அந்த வீடியோவில், கடலில் பாதி மூழ்கிய நிலையில் மிதக்கும் வோல்க்ஸ்வாகன் கால்ப் காரை மீட்பதற்காக அதன் உரிமையாளர் முயற்சித்து வருகிறார். எனினும், பலத்த நீரோட்டம் காரணமாக அந்த கார் ஆழத்திற்கு இழுத்துச்செல்லப்படுகிறது. 

காரில் இருந்த சிறிய ஜெட் ஸ்கை ரக போட்டை தண்ணீரில் இறக்குவதற்காக கடலுக்கு மீக அருகில் உரிமையாளர் காரை நிறுத்தியுள்ளார். அப்போது, வேகமாக அலை அடித்ததால், கார் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த டால்பி (40) கூறும்போது, காரைக் காப்பாற்றுவதற்காக அதன் உரிமையாளர் இடுப்பு அளவு ஆழமுள்ள நீரில் இங்கும், அங்கும் அலைந்து வந்தார். அந்த நேரத்தில் அங்கு ஜெட் ஸ்கை போட்டில் வந்த மற்றொரு நபர் அவருக்கு உதவ முயன்றார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

கீழே வீடியோ:

இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்துள்ளார். இதுவரை 3.6 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் செய்துள்ளனர். 

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சன் பத்திரிகை அளித்துள்ள தகவலில், மீட்பு நடவடிக்கை வெற்றிகராமக முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. உதவி செய்ய முன்வந்த நபர் கயிறு கட்டி காரை பத்திரமாக மீட்டுள்ளார். 

Advertisement

இதேபோல், கடந்த வருடம் மகாராஷ்டிராவில் கடலுக்கு அருகே நிறத்தப்பட்டிருந்த கார் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisement