This Article is From Aug 17, 2018

கர்நாடகாவில் கனமழை: குடகில் தரைமட்டமாக இடிந்து விழுந்த வீடு… அதிர்ச்சி வீடியோ!

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கும், தென் கர்நாடகா மாநிலத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது

Bengaluru:

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கும், தென் கர்நாடகா மாநிலத்தில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பணிகளுக்காக மாநில அரசின் சார்பில் 200 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குடகு மாவட்டம் தான். தென்மேற்கு கர்நாடகாவில் அமைந்துள்ள இம்மாவட்டம் காபி பயிருக்கும், குடகு அருவிக்கும் பெயர் பெற்ற ஊர் ஆகும். 

பெங்களூரில் இருந்து 260 கி.மீ தொலைவில் உள்ள குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையை அப்பகுதிவாசிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். குடகுக்குச் செல்லும் அத்தனை சாலைகளும் நிலச்சரிவின் காரணமாக மூடப்பட்டுள்ளன. நிலச்சரிவின் காரணமாக குடகுவில் குல்சாநகர் பகுதி தொடர்புக்கு அப்பால் சென்றுள்ளது. 

oq0kf69

 

குடகுவாசி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் ஒரு பெரிய வீடு நிலச்சரிவால் சரிந்து விழுவதைக் காட்டுகிறது. இரண்டு மாடிகள் கொண்ட அந்த வீடு அப்பகுதியிலேயே மிகுந்த உயர்ந்த கட்டடமாக உள்ளது. மழை வெள்ளதால் அக்கட்டிடத்தின் ஒரு பகுதி மெதுவாக சரியத் தொடங்க, சில நொடிகளில் ஒட்டுமொத்தமாக சரிந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. அக்கட்டிடத்தின் முன்னாள் நிற்பவர்கள் பாதுகாப்புக்காக சிதறி ஓடுகின்றனர்.

ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் மக்களுக்காக 200-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரையில் மழை வெள்ளத்தில் சிக்கி 14 பேர் மரணமடைந்துள்ளனர். ஒருவர் காணவில்லை. 

கர்நாடகாவில் உள்ள இரண்டு அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. ஆற்றின் ஓரத்தில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை பாதித்தப் பகுதிகளில் நிலச்சரிவு தொடர்கிறது.

.