This Article is From Nov 10, 2018

''ஸ்பெஷாலிட்டி ஆக்குபேஷன்'' ஹச்1பி விசா மூலம் செக் வைக்கிறதா அமெரிக்கா?

''ஸ்பெஷாலிட்டி ஆக்குபேஷன்'' என்ற விஷயத்தை முன்னிறுத்துகிறது இந்த அரசு. இதன்மூலம் வேலைக்கு செல்ல ஒரு டிகிரி அல்லது டிகிரிக்கு நிகரான படிப்பு போதும் அது அதிக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்று கூறுகிறது.

''ஸ்பெஷாலிட்டி ஆக்குபேஷன்''  ஹச்1பி விசா மூலம் செக் வைக்கிறதா அமெரிக்கா?

H-1B விசா வழங்காமல் வெளிநாட்டிலிருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு கம்பீட் அமெரிக்காவால் அனுமதி மறுக்கப்படுகிறது.

Washington:

அமெரிக்காவில் பணிபுரிய செல்பவர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாக்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து வருகிறது.  முக்கிய ஐடி நிறுவனங்களான கூகுள், ஃபேஸ்புக் மற்றும் மைக்ரோசாஃப்ட் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு அதன் நெறிமுறைகளில் இருந்து மாறி செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

H-1B விசாவுக்கு அமெரிக்காவில் பணிபுரிய பலகட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு டெக் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஆண்டுதோறும் பணியாளர்களை தேர்ந்தெடுக்கின்றன. குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அதிக பணியாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

தற்போது உள்ள நிர்வாகத்தின்படி H-1B விசா வழங்குவதில் மூன்று மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அது H-1B விசா வழங்கலை அதிகப்படுத்தும் விதமாக இருக்கும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பின் செயலாளர் கிறிஸ்ட்ஜென் நீல்சன் தெரிவித்துள்ளார். புதிய மாற்றங்கள் சட்ட ரீதியான பிரச்னைகளை உண்டாக்கும், மேலும் 'கம்பீட் அமெரிக்கா'  எனும் அமெரிக்காவுடனான போட்டிக் கொள்கையை H-1B விசாவில் உள்ள மாற்றங்கள் பூர்த்தி செய்யாது என்று கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பை பொறுத்தமட்டில் இந்த மாற்றங்கள் நிறுவனங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை, கொள்கைகளை தெளிவாக விளக்காது. இது அமெரிக்க பூர்வகுடி மக்களிடம் அதிகமாக காணப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அதிக திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

''ஸ்பெஷாலிட்டி ஆக்குபேஷன்'' என்ற விஷயத்தை முன்னிறுத்துகிறது இந்த அரசு. இதன்மூலம் வேலைக்கு செல்ல ஒரு டிகிரி அல்லது டிகிரிக்கு நிகரான படிப்பு போதும் அது அதிக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்று கூறுகிறது. இதன் மூலம் அமெரிக்காவுடன் போட்டி என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது.

இதனால் கடந்த 18 மாதங்களில் விசா வழங்க மறுப்பது அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. கம்பீட் அமெரிக்காவை பொறுத்தமட்டில்  அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு ஆரம்ப நிலை வேலைகள் ''ஸ்பெஷாலிட்டி ஆக்குபேஷன்'' பிரிவுக்கு கீழ் வந்தாலும் அவர்களுக்கு விசா மறுக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

H-1B விசா வழங்காமல் வெளிநாட்டிலிருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு கம்பீட் அமெரிக்காவால் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனை எதிர்த்து சிலிக்கான் வேலி நிறுவனங்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

.