हिंदी में पढ़ें Read in English
This Article is From May 12, 2020

நீர் சுழற்சியில் சிக்கி பரிதவித்தவரை சாமர்த்தியமாக காப்பாற்றிய அதிகாரி - திக் திக் வீடியோ!

இந்த சம்பவம் குறித்தான வீடியோவுக்கு இதுவரை 1.4 லட்சம் பார்வைகளும் பல பாராட்டு கருத்துகளும் கிடைத்துள்ளன.

Advertisement
விசித்திரம் Edited by

கலிபோர்னியா ஹைவே பட்ரோல், தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது. 

அமெரிக்காவில் நீர் சுழற்சியில் சிக்கி பரிதவித்த 24 வயது நபரை தன் சாமர்த்தியம் மற்றும் சாந்தமான குணத்தால் காப்பாற்றியுள்ளார் அந்நாட்டைச் சேர்ந்த பட்ரோல் அதிகாரி ஒருவர். கலிபோர்னியாவின் ஏஞ்சல் நீர்வீழ்ச்சியில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது என்று சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது. நீர் சுழற்சியில் மாட்டிக் கொண்ட இளைஞர், ஏஞ்சல் நீர்விழ்ச்சிக்கு அருகில் ஹைக்கிங் செய்தபோது, ஓடும் நீரைக் கடக்க முயன்றுள்ளார். ஆனால் நீர் சுழற்சியை அவர் குறைத்து மதிப்புட்டு, ஆழம் தெரியாமல் காலை வைத்துள்ளார். அவ்வளவுதான் அவரால் நீரைக் கடக்கவே முடியவில்லை. அப்போதுதான் பட்ரோல் அதிகாரியான பிரென்ட் டோன்லிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டோன்லி அப்போது பணியில் இல்லை. இருந்தும் ஆபத்தில் இருந்தவரைக் காப்பாற்ற சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். உடனடியாக யோசித்த அவர், தன் பேக்-பேக் பையிலிருந்து நீண்ட சணல் போன்ற இறுக்கமான ஸ்டிராப்பை எடுத்துள்ளார். அதை தடிமனான ஒரு கொம்பில் சுற்றி, நீர்சுழலில் மாட்டியுள்ளவரிடம் தூக்கிப் போட்டுள்ளார். அதை அவர் லாவகமாக பிடித்துக் கொள்ள, கரையிலிருந்த மற்றவர்களின் உதவியோடு, சிக்கிய நபரை பத்திரமாக மீட்டுள்ளார் டோன்லி. திகில் கிளப்பும் இந்த மொத்த சம்பவமும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுப் பகிரப்பட்டுள்ளது. 

கலிபோர்னியா ஹைவே பட்ரோல், தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது. 

வீடியோவுடன், “நீர் சுழற்சியானது ஒரு நொடிக்கு 50-80 அடி ஓடிக் கொண்டிருந்தது. அது ஒரு நொடிக்கு 50-80 பேஸ்கெட் பால் அளவிலான நீர் வரத்து,” என்று சம்பவத்தின் தீவிரத் தன்மை குறித்து பதிவிட்டுள்ளது கலிபோர்னியா ஹைவே பட்ரோல். 

Advertisement

இந்த சம்பவம் குறித்தான வீடியோவுக்கு இதுவரை 1.4 லட்சம் பார்வைகளும் பல பாராட்டு கருத்துகளும் கிடைத்துள்ளன.

ஒரு ஃபேஸ்புக் பயனர், ‘அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. நீர் நிலைகளிலிருந்து வருடத்தின் இந்த சமயத்தில் தள்ளியே இருக்க வேண்டும்' என எச்சரிக்கிறார்.

Advertisement

இன்னொருவரோ, ‘இந்த மொத்த சம்பவத்தின் போதும் டோன்லி மிகவும் சாந்தமாக என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொண்டே இருக்கிறார். நீங்கள் ஒரு ஹீரோ' எனப் புகழ்ந்துள்ளார். 

உள்ளூர் ஷெரிஃப் அலுவலகம், “அதிகாரி டோன்லியின் விரைவான முன் யோசனை மற்றும் சரியாக தன்னைத் தயார்படுத்திக் கொண்டதற்கு நாங்கள் மிகவும் நன்றி தெரிவித்துக் கொறள்கிறோம்,” எனக் கூறியுள்ளது. 
 

Advertisement