டெல்லி காவல்துறைத் தலைவர் கான்ஸ்டபிள் வஜீர் சிங், 50, இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- மாணவன் ஒருவன் குடிபோதையில் காரை வேகமாக ஓட்டியதால் இந்த விபத்து
- விபத்தில் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
- 19 வயதான துஷார் குப்தா, வடக்கு டெல்லியின் மாடல் டவுன் பகுதியில் வசிப்பவர்
New Delhi: தேசிய தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த சாலை விபத்தில் ரோந்து பணியில் இருந்த இரு காவலர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு டெல்லியில் நடந்த இந்த விபத்தில், சிங்கப்பூரில் இளங்கலை படிப்பை தொடரும் மாணவன் ஒருவன் குடிபோதையில் காரை வேகமாக ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 2 மணியளவில் துஷார் குப்தாவின் கார் பிரகார் ரோந்து வாகனம் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
“நேற்றிரவு கல்சா கல்லூரி அருகே வேகமாக வந்த கார் ரோந்து வாகனத்தை மோதியதில் ஒரு காவலர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்தார். வாகனத்தின் ஓட்டுநர் மோசமான நிலையில் இருக்கிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” என வடக்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் மோனிகா பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் 19 வயதான துஷார் குப்தா, வடக்கு டெல்லியின் மாடல் டவுன் பகுதியில் வசிப்பவர், நண்பரைச் சந்தித்த பின்னர் அதிகாலை 2 மணியளவில் தனது ஹோண்டா சிட்டி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் குற்றங்களை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்து காவல்துறையின் வாகனம் மீது குப்தாவின் கார் மோதியுள்ளது.
குப்தாவின் கார் மோதியதில் ரோந்து வாகனம் 10-15 அடி வரை துக்கி வீசப்பட்டது. இதன் காரணமாக டெல்லி காவல்துறை தலைமை கான்ஸ்டபிள் வஜீர் சிங் காரில் சிக்கிக்கொண்டார். ஓட்டுநர் கான்ஸ்டபிள் அமித் பொதுமக்களின் உதவியோடு மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தில் வஜீர் சிங் உயிரிழந்துள்ளார். கான்ஸ்டபிள் அமித் படுகாயமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று டி.சி.பி பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.