This Article is From Oct 29, 2019

london பயங்கரம் : ஓட்டுநர் மீது வழக்கு பதிவு; மூவர் கைது

கைது செய்யப்பட்ட ட்ரக் ஓட்டுநர் மாரிஸ் ராபின்சன் மீது கொலை, கடத்தல், சதி, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பணமோசடிக்கு உதவியது ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

london பயங்கரம் : ஓட்டுநர் மீது வழக்கு பதிவு; மூவர் கைது

ட்ரக்கின் சட்டப்படியான உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்,

London:

லண்டனில் ட்ரக் ஒன்றில்  39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ட்ரக் அயர்லாந்தில் இருந்து வந்துள்ளது. 25 வயதான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ஓட்டுநரிடம் விசாரணை நடந்து வருகிறது. 

அதைத் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட இறந்தவர்கள் சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதில் 38 பேர் வயது வந்தோர் மற்றும் ஒருவர் டீன் ஏஜர் என்று தெரியவந்துள்ளது.  

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ட்ரக் ஓட்டுநர் மாரிஸ் ராபின்சன் மீது கொலை, கடத்தல், சதி, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பணமோசடிக்கு உதவியது ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஓட்டுநர் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். விசாரணை தொடர்பாக மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 38 வயதான ஆணும் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள வாரிங்க்டனைச் சேர்ந்த 38 வயது பெண்ணும் அடங்குவர் என்று தெரியவந்துள்ளது. ட்ரக்கின் சட்டப்படியான உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்,

.