Read in English
This Article is From Nov 02, 2018

டிரைவருக்கு அடி, உதை - ஆற்றுக்குள் பஸ் விழுந்ததில் 13 பேர் பலி

குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விடாததால் ஆத்திரம் அடைந்த பெண் பயணி டிரைவரை தாக்கியுள்ளார்

Advertisement
உலகம்

பஸ்ஸை மீட்கும் பணியில் படகுகளும், நீர் மூழ்கி வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

Beijing:

சீனாவில் பஸ் டிரைவரை பயணிகள் தாக்கியதால் தடுமாறிய டிரைவர் பஸ்ஸை ஆற்றுக்குள் இறக்கினார். இதில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் இருந்த காட்சிகளின் விவரம்-

சீனாவின் சாங்கிங் மாகாணத்தின் யாங்சே ஆற்றின் மேல் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியே பஸ் ஒன்று சென்று கடந்த ஞாயிறன்று சென்றது. அப்போது அதில் இருந்த பெண் பயணி ஒருவர் டிரைவரின் தலையில் ஒரு கட்டையால் அடித்துள்ளார்.

தொடர்ந்து அவருக்கு அடி உதை கொடுக்கப்பட்டது. இதனால் தடுமாறிய டிரைவர் பஸ்ஸை கார் ஒன்றின் மீது மோதிவிட்டு பின்னர் யாங்சே ஆற்றில் இறக்கினார்.

இந்த சம்பவத்தில் பஸ்ஸில் இருந்த 15 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விசாரணையில் டிரைவரை தாக்கியது 48 வயது பெண் என தெரியவந்தது.

Advertisement

சம்பவத்தின்போது, தான் இறங்க வேண்யடிய ஸ்டாப்பில் அந்தப் பெண் இறங்கத் தவறி விட்டார். இதன்பின்னர், பஸ்ஸை நிறுத்துமாறு டிரைவரிடம் அவர் கூற, பஸ் நிறுத்தப்படாததால் டிரைவரை தாக்கியுள்ளார் அந்தப் பெண்.

பஸ்ஸை நிறுத்தாததால் 13 பேர் உயிர் பிரிந்துள்ளது.

Advertisement
Advertisement