This Article is From Jan 03, 2020

ஃபேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமில் தாறுமாறாக கார் ஓட்டி சிக்கிய நபர்

23 வயதான ஹோஃப்லர் சனிக்கிழமை கோல்ட் ஸ்டார் மெமோரியல் பாலத்தின் மீது வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக ஏபிசி செய்தி தெரிவிக்கிறது.

ஃபேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமில் தாறுமாறாக கார் ஓட்டி சிக்கிய நபர்

தனது வாகனத்தை நொறுக்குவதற்காக பிரத்யேகமான முறையில் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார்

அமெரிக்காவின் கனெக்டிகட்டில் நபர் தனது வாகனத்தை நொறுக்குவதற்காக பிரத்யேகமான முறையில் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார். அதிவேகமாக பொறுப்பற்ற முறையில் தனது வாகனத்தை நெடுஞ்சாலையில் இயக்குவதை இந்த வீடியோவில் பார்க்கலாம். கேமரா அவரது கார் எந்த அளவு வேகத்தில் செல்கிறது என்பதைக் காட்டுகிறது. மணிக்கு 100 மைல் வேகத்தில் பயணிப்பதை காட்டுகிறது. 

நெடுஞ்சாலை வளைவில் கார் கட்டுப்பாட்டை இழக்கிறது. கார் விபத்துக்குள்ளாகி உருண்டு ஓடுவதை வீடியோவில் காணலாம். நல்வாய்ப்பாக ஓட்டுனர் ட்டுனர் கென்னத் ஹோஃப்லர்  விபத்தில் காயங்களுடன் தப்பிக்க முடிந்தது. 

23 வயதான ஹோஃப்லர் சனிக்கிழமை கோல்ட் ஸ்டார் மெமோரியல் பாலத்தின் மீது வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக ஏபிசி செய்தி தெரிவிக்கிறது. விபத்து நடந்த நேரத்தில் ஒரு காவல்துறை அதிகாரி அவரை பின் தொடர்ந்துள்ளார்.

காவல்துறை ஃபேஸ்புக் பக்கத்தில் “இந்த வாகனத்தின் ஓட்டுநர் கோல்ட் ஸ்டார் மெமோரியல் பாலத்தின் மீது பகிரங்கமாக ஒளிபரப்ப போதுமானதாக இருந்தார். விபத்தில் சிக்குவதற்கு முன்னர் பொறுப்பற்ற வேகத்தில் வாகனம் ஓட்டினார்” என்று தெரிவித்துள்ளது. 

வாகன விபத்துக்கு பின் இடிபாடுகளில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

ஓட்டுநர் மீது பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் இடைநிறுத்தப்பட்ட உரிமத்துடன் வாகனம் ஓட்டுதல், காப்பீடு இல்லாத காரை ஓட்டுதல், ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

Click for more trending news


.