ஓட்டுநரின் கவனக்குறைவால் தீ பற்றி எரிந்த வாகனம்.
தென் கிழக்கு சீனாவில் உள்ள ஸியான்கோஜு( Zhangzhou)சாலையில் வழக்கம் போல தனது டிரக்கை ஓட்டி வந்த டிரைவர் வ்யூ(Wu) வண்டியில் இருந்த படி சிகரெட் புகைப்பதை பழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல சிகரெட் துண்டை வெளியே எறிந்த அந்த ஓட்டுநரின் வாகனம் திடீர் என தீப்பற்றி எரிந்தது.
அருகில் உள்ளவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அந்த ஓட்டுநர் தான் தூக்கியெறிந்த சிகரெட் துண்டுதான் காற்றின் வேகத்தால் மீண்டும் வந்து டிரக்கில் இருந்த எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் மீது தாக்கியதாக ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் அந்த சம்பவத்தில் எரிந்து போன பொருட்களின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டது.
இச்சம்பவத்தில் அவர் கொண்டு சென்ற சைக்கிள்களும் சில பிளாஸ்டிக் பொருட்களும் பாதிப்படைந்தன.
Click for more
trending news