This Article is From Nov 22, 2019

பேருந்தில் கியர் மாற்றி விளையாடிய கல்லூரி மாணவிகள்; டிரைவர் லைசன்ஸ் ரத்து!

கேரளாவின் வயநாட்டை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிகள் கோவாவிற்கு 7 நாள் சுற்றுலா பயணமாக அந்த பஸ்சில் சென்றுள்ளனர்.

பேருந்தில் கியர் மாற்றி விளையாடிய கல்லூரி மாணவிகள்; டிரைவர் லைசன்ஸ் ரத்து!

கல்லூரி நிர்வாகிகள் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த வகுப்புகளை அந்த மாணவிகளுக்கு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Kochi:

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற அனுமதித்த சுற்றுலா பேருந்து ஓட்டுநரின் லைசன்ஸ் 6 மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கேரளாவின் வயநாட்டை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிகள் கோவாவிற்கு 7 நாள் சுற்றுலா பயணமாக அந்த பஸ்சில் சென்றுள்ளனர். அப்போது, அந்த தனியார் பஸ் டிரைவர் பஸ்சை ஓட்டும்போது அவரது அருகில் இருந்த 2 இளம் பெண்கள் பஸ் கியரை மாற்றுகின்றனர். 

பஸ்சில் ஓடும் பாடலுக்கு ஏற்றவாறு கியரை மாற்றுகின்றனர் அந்த பெண்கள். ஓடும் பேருந்தில் கியரை மாற்ற அந்த டிரைவரும் பெண்களுக்கு அனுமதி அளித்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்த மாணவிகள் சிலர் அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ள நிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.  

இந்த விவகாரம் கேரள மோட்டார் வாகனத்துறைக்கு தெரிய வரவே, அவர்கள் குறிப்பிட்ட அந்த கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், சம்மந்தப்பட்ட அந்த மாணவிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, கல்லூரி நிர்வாகிகள் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த வகுப்புகளை அந்த மாணவிகளுக்கு எடுக்க உள்ளதாக பதிலளித்துள்ளது. இதற்காக மோட்டார் வாகனத்துறை அதிகாரிகளை வகுப்பெடுக்க கல்லூரிக்கு அழைப்பு விடுக்கவும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர், செரிஃப் கூறும்போது, அவர்கள் இதனை விளையாட்டாக செய்திருக்கலாம். எனினும், இது ஆபத்தான, அலட்சியமான செயல் என்று கூறிய அவர், மோட்டர் வாகனச்சட்டத்தை அந்த ஓட்டுநர் மீறியுள்ளார். எனவே அந்த ஓட்டுநரின் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்று கூறினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.