இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டதற்கு பின்பு 2.7 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது
கனடாவில் மாண்ட்ரீலில் முதலை ஒன்று நிதானமாக சாலை கடந்து சென்றது. சிபிசி செய்தியின் படி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்திலிருந்து இந்த முதலை தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. பணியாளர்கள் மதிய நேர உணவுக்காக நிறுத்திய போது வேனிலிருந்து முதலை தப்பி நிதாமான சாலை கடந்து சென்றுள்ளது.
வில்லேரில் உள்ள ஜார்ரி ஸ்ட்ரீல் முதலை மெதுவாக சாலையை கடந்து செல்லும் காட்சியி ட்விட்டரில் வைரலாகியுள்ளது. முதலை நிதானமாக சாலையை கடக்க வாகனங்கள் மெதுவாக செல்வதை காணலாம். சாலையை கடந்து நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் சென்று மறைந்து விடுகிறது.
எம்.டி.எல் வலைப்பதிவின் படி ஊர்வன விலங்குகள் -4 டிகிரி செல்சியஸ் குளிரில் மெதுவாக சென்றது. குளிர்ச்சியான நாட்களில் முதலையினால் வேகமாக நகர முடியாது என்று தெரிவித்துள்ளது.
இந்த வீடியோவை மெய்சம் சமஹா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டதற்கு பின்பு 2.7 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. பல நகைச்சுவையான கமெண்டுகளையும் பெற்றுள்ளது
தப்பி ஓடிய முதலையை பணியாளர் தேடி பிடித்து காவல்துறை வருவதற்குள் மீண்டும் வேனில் ஏற்றிவிட்டனர்.
Click for more
trending news