Saudi Arabia: இந்த தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. (Reuters)
ஹைலைட்ஸ்
- The fires have been controlled, according to Saudi interior ministry
- An investigation had been launched after the attack
- There was no immediate claim of responsibility for the attacks
Riyadh: சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் உற்பத்தி ஆலையான சவுதி அரம்கோ எண்ணெய் புக்கியாக் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடைபெற்று உள்ளன. இந்த தகவலை உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
அதிகாலை 4 மணிக்கு அரம்கோவின் தொழிற்துறை ட்ரோன்களின் விளைவாக தீ பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ சவுதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சவுதி அரம்கோவின் அப்காய்க் எண்ணெய் பதப்படுத்தும் ஆலை உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலையாகும்.
இங்கு ஒரு நாளைக்கு 7 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் பதப்படுத்த முடியும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 2006இல் அல்கொய்தா தாக்குதலில் தற்கொலை படைக் குழு தொழிற்சாலையில் ஊடுருவ முயன்றனர். இரண்டு பாதுகாப்பு காவலர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் இருவர் இறந்தனர்.
தஹ்ரானில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள குரைஸ் பெரிய எண்ணெய் வயல் அரம்கோவிற்கு கச்சா எண்ணெய்யை வழங்குகிறது.