Read in English
This Article is From Feb 24, 2019

பெங்களூரு தீ விபத்து சம்பவத்தை விவரிக்கும் ட்ரோன் படங்கள்!

காய்ந்த புல்கள் இருந்ததாலும் பலத்த காற்று வீசியதாவலும் தீ மளமளவென பரவியதாக மூத்த போலீஸ் அதிகாரி எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்

Advertisement
இந்தியா (with inputs from PTI)

போர்வை போத்தியது போல் தோன்றிய கறும் புகை பார்வையாளர்களை பீதியடைய செய்தது.

Bengaluru:

பெங்களூருவின் ஏலகங்கா பகுதியில் நடைபெற்ற ஏரோ இந்தியா விமான கண்காட்சியின் பார்க்கிங் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 300க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமடைந்தன.

ஆசியாவின் பிரதான விமான நிகழ்ச்சியின் கடைசி நாளில் இந்த விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த இடத்தின் நம்பமுடியாத வான்வழி ட்ரோன் படமானது சேதத்தின் நம்பத்தகுந்த அளவைக் காட்டுகிறது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விமான நிலையத்தில் இருந்து பார்க்கிங் நீண்ட தூரத்தில் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

காய்ந்த புல்கள் இருந்ததாலும் பலத்த காற்று வீசியதாவலும் தீ மளமளவென பரவியதாக மூத்த போலீஸ் அதிகாரி எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த கண்காட்சி தொடங்குவதற்கு முந்தைய நாள் ஒத்திகையில் ஈடுபட்ட விமானி, இரு விமானங்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தார். நேற்று 300-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சாம்பலான நிலையில், விமான கண்காட்சிக்கான ஏற்பாடுகள் சீராக செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விபத்து ஏற்பட்டவுடன் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எனினும், வெயில் நேரம் என்பதால் தீ மிக வேகமாக பரவியது. இதனால் வாகனங்களின் பாகங்களும் பெரும் சத்தத்துடன் வெடித்தது என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

எனினும் இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement