This Article is From Nov 01, 2018

ஒடிசாவில் ஒன்பது மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிப்பு!

ஓடிசாவில் மாநில அரசு வறட்சி அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட உத்தரவிட்டுள்ளது

ஒடிசாவில் ஒன்பது மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிப்பு!

ஓடிசாவில் மழையின்மையினால் விவசாயிகள் 33 சதவீத பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Bhubaneswar:

ஒடிசா அரசாங்கம் அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது மாவட்டங்கள் வறட்சியில் உள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

ஒன்பது மாவட்டங்களின் 23,3173.8 ஹெக்டேர் நிலப்பரப்பு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிசாவில் மழையின்மையினால் விவசாயிகள் 33 சதவீத பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு வறட்சி அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட உத்தரவிட்டுள்ளது.

மாநில வறட்சி கண்காணிப்பு பிரிவினர், வறட்சி மேலாண்மை 2016 கொண்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்படி மழை பெய்வதற்கான வாய்ப்பு 39 சதவீதத்திலிருந்து 59 சதவீதமாக குறைந்து விட்டதாக தெரியவந்துள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.