மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உடனே கைது செய்யலாம் - உயர்நீதிமன்றம்
ஹைலைட்ஸ்
- மதுபோதையில் வாகனம் ஓட்டினால் உடனே கைது செய்யலாம்.
- போதையில் வாகனம் ஓட்டுவோரை கண்காணிக்க தனிப்படை
- குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உடனே கைது செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வாகன விபத்தில் காயமடைந்த மணிகண்டன் என்பவர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டி செல்வோரைக் கண்காணிக்கத் தனிப்படை ஒன்றை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.