This Article is From May 04, 2019

பாடி அருகே குடிபோதையில் காரோட்டி மோதியதில் இருவர் பலி

மது குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால்  காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

பாடி அருகே குடிபோதையில் காரோட்டி மோதியதில் இருவர் பலி

காயம்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் (Representational)

Chennai:

சென்னையில் ஒரு மனிதன் குடிபோதையில் காரை ஓட்டி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில் அருகில் இருந்தவர்கள் இதற்கு சாட்சி கூறியுள்ளனர். பாடி அருகே எஸ்யூவி காரில் வந்தவர் இந்த விபத்தை நிகழ்த்திய காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

மது குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால்  காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். இந்த கார் முதலில் வயதான பெண்மணி மீது மோதி இழுத்துச் சென்று  மீண்டும் 52 வயது முதியவர் மீது மோதியுள்ளது. 

மற்றொரு பெண்ணை இடித்துச் சென்றுள்ளது. சம்பவ இடத்திலேயே இருவர் இறந்து விட,  காயம்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

கார் ஓட்டுநர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது 

.