This Article is From Aug 03, 2019

குடி போதையில் ஒட்டகச்சிவிங்கி மீது சவாரி செய்த நபர்… அடுத்து என்ன நடந்துச்சுன்னா..? #Video

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது உள்ளூர் போலீஸ்

குடி போதையில் ஒட்டகச்சிவிங்கி மீது சவாரி செய்த நபர்… அடுத்து என்ன நடந்துச்சுன்னா..? #Video

கஜகாஸ்தானின் ஷிம்கென்ட் உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக மெட்ரோ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது

கஜகஸ்தானில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் ஒட்டகச்சிவிங்கி மீது குடி போதையில் சவாரி செய்துள்ளார் ஒருவர். இது குறித்தான வீடியோ ஆன்லைனில் வைரலாக பரவி வருகிறது. கஜகாஸ்தானின் ஷிம்கென்ட் உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக மெட்ரோ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

துர்கெஸ்தான் டுடே என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 நாட்களுக்கு முன்னர் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் வேலிகளைத் தாண்டி ஒட்டகச்சிவிங்கி மீது நபர் ஒருவர் ஏறுவது தெரிகிறது. சிறிது நேரம் அமைதியாக இருக்கும் ஒட்டகச்சிவிங்கி, அந்த நபரை தூக்கியெறிகிறது. திரும்ப திரும்ப மிருகத்தின் மீது ஏறி அமர முயல்கிறார் அவர். தொடர்ந்து ஒட்டகச்சிவிங்கியும் அவரை தூக்கிப் போட்டு பந்தாடுகிறது. 

அந்த வீடியோவைப் பாருங்கள்:

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது உள்ளூர் போலீஸ். அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க - "ஆழ்கடலில் டைவிங் செய்தவருடன் கை குலுக்கிய சீல்"

Click for more trending news


.