This Article is From May 25, 2018

சக பெண் பயணிகளுக்குத் தொல்லை: கைதான அமெரிக்கர்!

அமெரிக்காவின் டென்வர் பகுதியிலிருந்து தெற்கு கரோலினாவுக்குச் செல்லும் ஃப்ராண்டியர் விமானத்தில் 45 வயதான மைக்கேல் ஹாக் என்பவர் பயணித்துள்ளார்.

சக பெண் பயணிகளுக்குத் தொல்லை: கைதான அமெரிக்கர்!

குடித்துவிட்டு தகராறு செய்த நபர்

ஹைலைட்ஸ்

  • ஃப்ராண்டியர் விமானத்தில் 45 வயதான மைக்கேல் ஹாக் என்பவர் பயணித்துள்ளார்
  • ஜன்னல் பக்கம் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணையும் எழுப்பியுள்ளா
  • கூடுதாலாகப் பலர் வந்து பேசவும்,தன் இருக்கையிலேயே சிறுநீர் கழித்துவிட்டார்
அமெரிக்காவின் டென்வர் பகுதியிலிருந்து தெற்கு கரோலினாவுக்குச் செல்லும் ஃப்ராண்டியர் விமானத்தில் 45 வயதான மைக்கேல் ஹாக் என்பவர் பயணித்துள்ளார்.

தன் பால்ய கால தோழியை சந்திப்பதற்காக தெற்கு கரோலினாவில் உள்ள சார்லஸ்டன் பகுதிக்குச் செல்ல இருந்தார் மைக்கேல். நீண்ட காலத்துக்குப் பின்னர் தன் நெருங்கிய பால்ய கால தோழியைச் சந்திக்க இருந்ததால் மிகுந்த ஆவலுடனும் உற்சாகத்துடனும் இருந்துள்ளார் ஹாக்.

ஆனால், இந்த உற்சாகமே இன்று அவருக்கு சிறை தண்டனை கிடைக்கும் அளவுக்கு சர்ச்சைக்கு உரியதாகி உள்ளது. விமானம் கிளம்பிய போது மூன்று பேர் சேர்ந்து அமரும் வரிசையில் நடுவில் உள்ள இருக்கை ஹாக்குக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஹாக்கின் இரு புறமும் இரண்டு பெண்கள் அமர்ந்து இருந்துள்ளனர். விமானப் பயணம் தொடங்கியதில் இருந்தே உற்சாக மனநிலையில் இருந்த ஹாக் தன் அருகில் அமர்ந்திருக்கும் சக பயணிகளான இரண்டு பெண்களிடமும் பேசிக்கொண்டே தொந்தரவு சேய்யும் வகையிலேயே இருந்துள்ளார்.

இதனால், ஜன்னலோர இருக்கையில் இருந்த பெண் சற்று நேரத்தில் கண் அசந்து தூங்கிவிட்டார். இதையடுத்து மற்றொரு புறம் இருந்த பெண்ணிடம் தகாத முறையில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் ஹாக். இதனால் கடும் கோபத்துக்கு உள்ளான பெண் ஹாக்கிடம் மரியாதையாக நடந்து கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால், ஹாக் அமைதியாக வருவதாகத் தெரியவில்லை.

ஜன்னல் பக்கம் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணையும் எழுப்பியுள்ளார். அதுவும் திடீரென பயந்து எழும் வகையில் அப்பெண்ணை எழுப்பியுள்ளார். இதானால் சிறிது அதிர்ந்த அப்பெண் ஹாக்கை எச்சரிக்கை செய்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து தன்னைப் பற்றியே அப்பெண்ணிடமும் ஹாக் பேசியேபடியே வந்துள்ளார்.

ஆனால், இடையிடையே விமானத்தில் கொடுத்த மதுவையும் ஹாக் அருந்தி வந்துள்ளார். இதனால் போதையில் அவ்விரு பெண்களையும் மாறி மாறி தொல்லை கொடுத்து வந்துள்ளார் ஹாக். ஒரு கட்டத்தில் ஜன்னலோர இருந்த பெண்ணின் மேல் கைவைத்துப் பேசுவதும் தவறான அணுகு முறையுடன் பேசுவது தொடுவது என எல்லை மீறி நடந்து கொண்டுள்ளார் ஹாக். இதையடுத்து விமானப் பணியாளர்களிடம் அப்பெண்கள் இருவரும் புகார் அளித்துள்ளனர். ஆனால், எது குறித்தும் எந்தக் கவலையும் இன்றி ஒட்டுமொத்த விமானத்தையும் சந்தை போல் ஆகிவிட்டிருந்தார் ஹாக்.

கூடுதாலாகப் பலர் வந்து பேசவும், தன் இருக்கையிலேயே சிறுநீர் கழித்துவிட்டார் ஹாக். இதை சற்றும் எதிர்பாராத சக பயணிகளும் விமானப் பணியாளர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டிருஎதனர். பின்னர் விமானம் தரையிறங்கியதும் ஹாக் கைது செய்யப்பட்டார். அவருக்கு 25ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதம் இல்லையென்றால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை என தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.