This Article is From Aug 27, 2020

சாலையில் கிடந்த பாம்பிடம் சண்டைபோட்டு, அதை துண்டுத் துண்டாக கடித்துத் துப்பிய போதை ஆசாமி!

கடந்த திங்கட்கிழமை முதல் நாட்டின் பல்வேறு இடங்களில் மதுபானங்கள் விற்பனைக்கு அனுமதி கொடுத்தது அரசு.

சாலையில் கிடந்த பாம்பிடம் சண்டைபோட்டு, அதை துண்டுத் துண்டாக கடித்துத் துப்பிய போதை ஆசாமி!

கர்நாடக மாநிலத்தின் கோலாரில் போதை ஆசாமி ஒருவர் சாலையில் கிடந்த பாம்பை துண்டுத் துண்டாக கடித்தார்

ஹைலைட்ஸ்

  • கொரோனா ஊடரங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன
  • இந்நிலையில் மே 3 முதல் நாட்டில் மதுக்கடைகள் திறக்க அனுமதியளித்தது அரசு
  • கர்நாடகாவில் மதுபானங்கள் விற்பனை மிக அதிகமாக உள்ளது
Kolar, Karnataka:

கர்நாடக மாநிலத்தில் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், போதை ஆசாமி ஒருவர் சாலையில் கிடந்த பாம்பை துண்டுத் துண்டாக கடித்துத் துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்தான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அதில் சாலையில் கிடக்கும் பாம்பிடம், ‘என் பாதையையே மறிக்கிறாயா' என்று கோபப்படும் அந்த போதையேறிய நபர், யாரும் எதிர்பாராத வகையில் பாம்பைக் கையிலெடுத்துக் கத்த ஆரம்பிக்கிறார். தொடர்ந்து அந்தப் பாம்பை தன் பற்களால் துண்டுத் துண்டாக கடித்துத் துப்புகிறார். பாம்பை முழுவதுமாக கடித்துத் துப்பும் வரை அந்த நபர், தொடர்ந்து கூச்சிலட்டபடி இருந்துள்ளார். 

இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தின் கோலாரில் நடந்துள்ளதாக தெரிகிறது. பாம்பைக் கடித்துத் துப்பிய நபரின் பெயர் குமார் என்று தெரியவந்துள்ளது. 

கடந்த திங்கட்கிழமை முதல் நாட்டின் பல்வேறு இடங்களில் மதுபானங்கள் விற்பனைக்கு அனுமதி கொடுத்தது அரசு. இதைத் தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையும் மதிக்காமல், மதுபானக் கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர் மக்கள். 

கர்நாடகாவின் பெங்களூருவில் ஒரு நபர், 52,000 ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கிக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல பெங்களூருவில் நடந்த இரண்டு தனித் தனி சம்பவங்களில், மது குடித்துவிட்டு நடந்த கைகலப்பில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் பெங்களூருவில், போதையில் தடுமாறிய நபர் ஒருவர், பாதாள சாக்கடையில் தலைக்குப்புற விழுந்து இறந்துள்ளார். 

திங்கட்கிழமையன்று மட்டும் கர்நாடக மாநிலத்தில், 45 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றுள்ளன. 

.