বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 15, 2020

நாயிடம் வசமாக சிக்கிய வாத்து!! - சாமர்த்தியமாக தப்பியது எப்படி? வீடியோ

வாத்தின் சாமர்த்திய நடிப்பை பார்த்து நெட்டிசன் பலரும் அதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
விசித்திரம் Edited by

நாயின் முன்பு உயிரிழந்தது போல நடிக்கும் வாத்து.

Highlights

  • நாயிடம் வசமாக சிக்கிய வாத்து!! - சாமர்த்தியமாக தப்பியது எப்படி?
  • நாயின் முன்பு உயிரிழந்து போல நடிக்கும் வாத்து.
  • இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்துள்ளது.

நாயிடம் வசமாக சிக்கிய வாத்து ஒன்று, அதன் வசமிருந்து சாமர்த்தியமாக தப்பித்து செல்லும் வைரல் வீடியோ ஒன்று நெட்டிசன்களை சிலிர்க்க வைத்துள்ளது. 

இதுதொடர்பாக இந்திய வனத்துறை அதிகாரி சுஸாந்தா நந்தா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட வீடியோவில், அந்த வாத்து தரையில் உயிரிழந்தது போல் கண்களை மூடிய படி இருக்கிறது. அதனை பார்த்த படி நாய் ஒன்று அதன் முன்பு நிற்கிறது.

நாயின் கவனம் திசை திரும்பும் வரை வாத்து உண்மையிலே ஒரு உயிரிழந்த சடலத்தை போல் கிடக்கிறது. அடுத்து சில விநாடிகளில், நாய் திரும்பி செல்ல, கண்ணிமைக்கும் நொடியில் அந்த இடத்தில் இருந்து எழுந்த வாத்து வேகமாக தப்பிச்செல்கிறது. 

வாத்தின் இந்த குறும்புத்தனமான வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்துள்ளது. 

ஏற்கனவே கடந்த 2019ல் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த இந்த வீடியோவை, வனத்துறை அதிகாரி மீண்டும் பகிர்ந்ததை தொடர்ந்து, தனது பாதுகாப்பிற்காக புத்திசாலித்தனமாக செயல்பட்ட அந்த வாத்தின் நடிப்பு ஆஸ்காருக்கு தகுதியானது என பலரும் பாராட்டி வருகின்றனர். 

இந்த வீடியோவை பகிர்ந்த நந்தா அதில், நாயிடம் இருந்து தப்பிக்க இறந்தது போல், காட்சியளிக்கும் வாத்து என்றும், நடிப்பு என்பது நேர்மையாக பாசாங்கு செய்வது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

இந்த வீடியோவை 9,000க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும், பலர் வாத்தின் அபார நடிப்பை பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர். 

இந்த வீடியோ குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களது கருத்துகளை கமெண்ட் பிரிவில் பதிவு செய்யுங்கள்.

Advertisement
Advertisement