2019-20 ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் கெடு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு!
ஹைலைட்ஸ்
- வருமான வரி தாக்கல் கெடு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு!
- ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் அறிவித்தார்.
- செப்.30, 2020ல் தடைசெய்யப்படும் மதிப்பீடுகளும் டிச.31,2020 வரை நீட்டிப்பு
New Delhi: 2019-20 நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கெடுவை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை அறிவித்தார்.
அதில், நேரடி வரி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அனைத்து விதமான வருமானங்களுக்கான வரிகளை தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், வரி தணிக்கை செய்வதற்கான தேதியும் செப்டம்பர் 30, 2020ல் இருந்து அக்டோபர் 31, 2020 வரை.ஒரு மாதத்திற்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
செப்.30, 2020ல் தடைசெய்யப்படும் மதிப்பீடுகளும் டிசம்பர் 31,2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மார்ச்.31, 2021ல் தடைசெய்யப்படும் மதிப்பீடுகளும் செப்.30, 2021 வரை நீட்டிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
கூடுதல் தொகை இல்லாமல் பணம் செலுத்துவதற்கான "விவாட் சே விஸ்வாஸ்" திட்டத்தின் காலமும் டிச.31, 2020 வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.