This Article is From May 27, 2019

''தவறான புரிதலால் வட மாநிலத்தவர் பாஜகவை ஆதரித்து விட்டனர்'' : கே.எஸ். அழகிரி

தென் மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவு இல்லை. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

Advertisement
இந்தியா Written by

உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிர மாநிலங்கள் பாஜக ஆட்சியமைப்பதற்கு முக்கிய பங்காற்றின.

தவறான புரிதல் காரணமாக வட மாநிலத்தவர் பாஜகவை ஆதரித்து விட்டனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மட்டும் 302 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. வட மாநிலங்களில் பெரும் ஆதரவை பெற்ற பாஜகவுக்கு தென் மாநிலங்களில் ஆதரவு ஏதும் இல்லை. 

தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. கர்நாடகத்தில் மட்டும் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 26 தொகுதிகளை பாஜக வென்றது. 

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்ட மொத்தம் 38 தொகுதிகளில் தேனியை தவிர்த்து 37 இடங்களில் வெற்றி பெற்றது. ஏற்கனவே தமிழகத்தில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்த பாஜக இந்த தேர்தலில் அதையும் இழந்தது. 

Advertisement

தமிழக தேர்தல் நிலவரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

உலகம் முழுவதும் வலதுசாரிகளுக்கும் வாக்களிக்கும் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் வலது சாரிகள் வெற்றி பெற்று வருகின்றனர். ஒரு தவறான புரிதல் காரணமாக வட மாநிலத்தவர் பாஜகவை ஆதரித்து விட்டனர். 

Advertisement

திமுக தலைமையில் அற்புதமான கூட்டணி தமிழகத்தில் அமைந்தது. இதனால்  தமிழகத்தில் அதிமுக, பாஜக கட்சிகளின் அடிச்சுவடே இல்லாமல் போய் விட்டது. 

இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறினார்.

Advertisement