This Article is From Mar 16, 2020

திமுகவின் பொதுச் செயலாளராகப் பதவியேற்க உள்ளார் துரைமுருகன்!

துரைமுருகன், பொருளாளர் பதவியிலிருந்து விலகிய பின்னர், அந்தப் பதவிக்குக் கட்சியின் மூத்த உறுப்பினர்களான...

திமுகவின் பொதுச் செயலாளராகப் பதவியேற்க உள்ளார் துரைமுருகன்!

தற்போது திமுகவின் பொருளாளராக இருக்கும் துரைமுருகன், பொதுச் செயலாளராக விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

ஹைலைட்ஸ்

  • திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகன் சமீபத்தில் காலமானார்
  • அவரின் மறைவைத் தொடர்ந்து திமுக, புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்கிறது
  • வரும் 29 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது

கடந்த பல ஆண்டுகளாக திமுகவின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வந்த பேராசிரியர் க.அன்பழகன், சில நாட்களுக்கு முன்னர் காலமானார். அதைத் தொடர்ந்து கட்சிக்குப் புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய திமுக, நாள் குறித்துள்ளது. அதன்படி, வரும் 29 ஆம் தேதி, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி, கட்சியின் புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய உள்ளனர். 

தற்போது திமுகவின் பொருளாளராக இருக்கும் துரைமுருகன், பொதுச் செயலாளராக விருப்பம் தெரிவித்துள்ளாராம். இதைக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதனால் பொருளாளர் பதவியிலிருந்து விலகி, பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. அவர், பொதுக்குழுக் கூட்டத்தில் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. 

துரைமுருகன், பொருளாளர் பதவியிலிருந்து விலகிய பின்னர், அந்தப் பதவிக்குக் கட்சியின் மூத்த உறுப்பினர்களான டி.ஆர்.பாலு, எ.வ.வேலு மற்றும் பொன்முடி ஆகியோர் போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது. 

இதனால் வரும் 29 ஆம் தேதி கூடவுள்ள திமுக பொதுக்குழுக் கூட்டத்திலேயே, கட்சிக்குப் புதிய பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. 

.