This Article is From May 04, 2019

“ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்”- முதல்வருக்கு சவால்விடும் துரைமுருகன்!

'பாவம். அவரென்ன ராஜினாமா செய்வது. மக்கள்தான் அவரை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டார்களே’

“ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்”- முதல்வருக்கு சவால்விடும் துரைமுருகன்!

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் வார்த்தைப் போர் நடந்து வருகிறது. 

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் வார்த்தைப் போர் நடந்து வருகிறது. 

சில நாட்களுக்கு முன்னர் சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் இடைத் தேர்தலையொட்டி பிரசாரம் செய்து கொண்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, ‘துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டபோது, 12 கிலோ தங்கம் மற்றும் 13 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளனர். இவ்வளவு பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது. மக்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்' என்று பேசி பரபரப்பை கிளப்பினார். 

இதற்கு துரைமுருகன் தற்போது, ‘முதலமைச்சர் எடப்பாடி கூறியது அத்தனையும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். எங்களுடைய வீடு மற்றும் கல்லூரியில் வருமான வரித் துறையினர் சோதனையிட்ட போது, அவர்கள் எடுத்துச் சென்றது 10 லட்சம் ரூபாய் மட்டுமே. கோடிக்கணக்கில் பணம் மற்றம் தங்கம் கைப்பற்றப்படவே இல்லை. இதை அத்தனையும் அறிந்து கொள்ளும் இடத்தில் இருக்கும் முதல்வருக்கு, எதுவும் தெரியாமல் பேசியிருப்பது கேலிக்குரியதாகும்.

முதலமைச்சருக்கு ஒரு சவால். அவர் கூற்றுப்படி, எங்களுக்கு சொந்தமான இடங்களில் 12 கிலோ தங்கத்தையும், 12 கோடி ரூபாயையும் வருமான வரித் துறையினர் கைப்பற்றியதாக நிரூபித்தால், நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன். இல்லாவிட்டால், முதலமைச்சார் பழனிசாமி, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா?

பாவம். அவரென்ன ராஜினாமா செய்வது. மக்கள்தான் அவரை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டார்களே' என்று கூறியுள்ளார்.

.