This Article is From Sep 03, 2020

திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு; போட்டியின்றி தேர்வு

மாலை 4 மணியோடு வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. மற்றவர்கள் யாரும் போட்டியிடாததால், திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement
தமிழ்நாடு Posted by

திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர் பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

திமுகவில் பொதுச்செயலாளராக இருந்த அன்பழகனின் மறைவுக்குப்பின் அப்பதவி காலியாக உள்ளது. இதனையடுத்து அந்தப் பதவிக்கு பொருளாளராக இருக்கும் துரைமுருகன் போட்டியிடுவதற்காக, பொருளாளராக பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இருபதவிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

 இருபதவிகளுக்கும் மார்ச் 29 ஆம் தேதி பொதுக்குழு நடத்துவதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திமுக பொதுக்குழு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

இதனையடுத்து தற்போது வரும் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது. பொருளாளர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (செப் 3) நடைபெறும் என்றும், 4 ஆம் தேதி பரிசீலனையும், 5 ஆம் தேதி வரையில் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இன்று திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலுவும், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, டி.ஆர் பாலுவின் வேட்புமனுவைப் பெற்றுக்கொண்டார். 

மாலை 4 மணியோடு வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. மற்றவர்கள் யாரும் போட்டியிடாததால், திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement